உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் வரை ஓயப்போவதில்லை: இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் வரை ஓயப்போவதில்லை: இபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் அதிமுக நல்லாட்சி அமையும், தமிழக மக்கள் வாழ்வு உயரும். அதுவரை ஓயப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; எனது எழுச்சிப் பயணத்திற்கு அளித்த வரவேற்புக்கு திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, நல்லாட்சி வழங்குவதே நான் தெரிவிக்கும் நன்றிக்கு நிகரானது. அதுவே எனது கடமை, தமிழக மக்களின் விருப்பமும் கூட.பிரசார பயணத்தின் போது, ஸ்டாலின் அரசால் படும் துயரங்களையும், தங்கள் குறைகளையும் தெரிவித்து வருகின்றனர். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் என அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், வேலயுதபுரம் கிராம மக்கள், குடிதண்ணீருக்காக ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. இந்த ஆட்சி அனைத்து துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வி அடைந்த அரசாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு, தனது பெயரையே சூட்டி புது திட்டங்கள் போல் அறிமுகப்படுத்துவதும்; முறையாக நிதி மேலாண்மை மேற்கொள்ளத் தெரியாமல் தமிழகத்தை கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் இந்த ஸ்டாலின் அரசின் சாதனை.அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம்,மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, படித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் போன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.தமது ஆட்சியின் குறைகளை சரி செய்யாமல், விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் ஆட்சி, விரைவில் அகற்றப்படும். மக்கள் அகற்றுவார்கள்.இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை