உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இன்று சந்தித்து பேச உள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு 7.50க்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.விழா முடிந்த பிறகு ,தனி விமானம் மூலம் திருச்சி பயணிக்கும் பிரதமர் மோடி அங்கு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். திருச்சி வரும் பிரதமரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்,, சந்திக்கிறார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்திக்கின்றனர்.அப்போது தமிழக அரசியல் நிலவரம், தாம் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரம் குறித்து அவர் பிரதமரிடம் சில நிமிடங்கள் பகிர்வார் என்று தெரிகிறது.இ.பி.எஸ்.,சை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ஓ. பன்னீர் செல்வம் பிரதமரை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் பிரதமரை சந்திக்கும் 13 பேர் கொண்ட பெயர் பட்டியலில் ஓ.பி.எஸ்., பெயர் இடம் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூலை 26, 2025 14:56

பிரதமர் மோடி அவர்களை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நடந்து செல்வாரா இல்லை தவழ்ந்து செல்வாரா?


vivek
ஜூலை 26, 2025 17:25

இல்லை வேணு .....நிச்சயமாக பயந்து போய் அப்போலோ போக மாட்டார்.....


David DS
ஜூலை 26, 2025 14:34

மோடியை சந்திக்க வேண்டாம் என்றுதான் ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டு வீடியோ சூட் நடத்தி வருகிறார்


Anbuselvan
ஜூலை 26, 2025 13:55

திரு OPS அவர்கள் இனிமேல் பிஜேபி இல் சேரலாம் அல்லது தனி கட்சி ஆரம்பிக்கலாம். வேறு வழியே இல்லை.


S.L.Narasimman
ஜூலை 26, 2025 12:39

மோடி எடப்பாடியாரை சந்திக்கலாம். ஆனால் திமுக பி டீம் தவிர்க்கலாம்.


Perumal Pillai
ஜூலை 26, 2025 12:34

ஒரு தடவை திருடன் எப்போதுமே திருடனாகத்தான் இருப்பான் .


THAYUMANAVAN GANESAN
ஜூலை 26, 2025 12:02

திரு மோடி, மறந்தும் கூட தன்னுடைய முதுகினை எட்டப்பன்பாடிக்கு காட்டக் கூடாது. அப்படி நடந்தால் என்ன விபரீதம் வேண்டுமானாலும் ஏற்படலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 11:51

அப்படியே ஒபிஎஸ் தினகரனையும் சந்திக்கலாம். அவர்களை விட எடப்பாடி எவ்விதத்திலும் உயர்ந்தவரல்ல. அரை சதவீத வாக்கு வங்கிக்குமேல் வைத்திருக்கும் எல்லோரையும் அரவணைக்கும் பண்பை திமுக விடம் கற்க வேண்டும்.


T.sthivinayagam
ஜூலை 26, 2025 11:30

குறைந்த பட்சம் என்பது இடங்களில் பாஜாக போட்டியிட வேண்டும் என்று கட்சினர் விரும்புகிறார்கள்


vivek
ஜூலை 26, 2025 12:14

இந்த தேர்தலில் திமுக மண்ணை கவ்வும் என்று சிவநாயகம் கூறுகிறார்


Kasimani Baskaran
ஜூலை 26, 2025 11:24

பாஜக மற்றும் கூட்டணியில் இருப்போர் வெறுமனே ஒட்டு மட்டும் போட்டுவிட்டு ஓரத்தில் அமரவேண்டும் - ஆனால் நாங்கள் மட்டும் ஆள்வோம் என்கிற கோட்பாட்டுடன் சந்திப்பு நடந்தால் உருப்பட வாய்ப்பு இல்லை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 26, 2025 11:08

தமிழகமக்கள் திருட்டு , கொள்ளை , கற்பழிப்பு , பாலியல் பலாத்காரம் கிட்னி விற்பனை , குழந்தை விற்பனை , பயமில்லாமல் இருக்க ஆட்சிமாற்றம் நிகழ உங்கள் கூட்டணி தொடர வாழ்த்துக்கள் ,,,


VSMani
ஜூலை 26, 2025 12:08

தமிழகமக்கள் திருட்டு , கொள்ளை , கற்பழிப்பு , பாலியல் பலாத்காரம் கிட்னி விற்பனை , குழந்தை விற்பனை , பயமில்லாமல் இருக்க ஆட்சிமாற்றம் நிகழvendum. aanaal athimua alla. thimuka athimu illaatha veru katchi seemaan + vijay


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை