உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைக்கலாம் என்று அ.தி.மு.க., முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டி விவரம்; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wgre1prk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் வரும்போது தான் ஸ்டாலினுக்கு மக்களே கண்ணுக்கு தெரிவாங்க. அதன் டைட்டிலே(உங்களுடன் ஸ்டாலின்) மாத்தி இருக்கலாம். என்னை கேட்டால் உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கலாம்.ஏன் என்றால் தமிழக அரசின் இலச்சினையான வாய்மையே வெல்லும் போய், பொய்மையே வெல்லும் என்பதாக மாறிவிட்டது. மனுக்கள் வாங்குகிறார் ஸ்டாலின். நான் அவரிடம் கேட்கிறேன், கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? 2021 தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு தொகுதியாக போனீங்க. என்ன சொன்னீர்கள், இங்கே ஒரு பெட்டி இருக்கு.மனுக்களை அதில் போடுங்க. இதோ பாருங்க என் கையில் இருக்கிறது பேனா இல்லை (தம் பாக்கெட்டில் இருக்கும் பேனாவை கையில் எடுத்துக்காட்டி பேசுகிறார்) சாவி. முதல்வரான உடன் இதை நானே திறப்பேன். அதில் உள்ள மனுக்களை நானே படிப்பேன். நானே நடவடிக்கை எடுப்பேன். எத்தனை மனு வந்தது, எத்தனை நடவடிக்கை எடுத்தீங்க? எத்தனை பேரின் குறைகளை தீர்த்து வைத்தீங்க? ஒண்ணும் இல்லை... இன்னொரு பொய் சொன்னார். என்ன சொன்னார்... நேரா கோட்டைக்கு வரலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டாங்க. என் ரூமுக்கு நேராக வரலாம், உங்க குறையை சொல்லலாம் என்று சொன்னீங்க? கோட்டைக்கு பொதுமக்கள் வந்து ஸ்டாலினை சந்திச்ச வரலாறு உண்டா? யாராவது சந்திச்சு இருக்கீங்களா? வாங்கின மனுக்களுக்கு தீர்வு கிடையாது. அதிகாரிகளையும் சந்திக்க முடியாது. 6 மாதத்தில் தேர்தல் வருது. முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற அதிகாரிகள் இருக்காங்க இல்ல, அவங்க புதுசு புதுசா பேர் சொல்றது.. அதில் ஒண்ணும் குறையில்லை.இப்போ என்ன பண்றீங்க.. உங்களுடன் ஸ்டாலின் அப்படின்னு மக்கள்கிட்ட போய் நிற்பது. பொய்களுடன் ஸ்டாலின் என்று அதற்கு சொல்வது தான் உண்மையான பேராக இருக்கும். இந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது.சட்டம் ஒழுங்கு போய்விட்டது, கஞ்சா,கட்டப்பஞ்சாயத்து, அதுமட்டும் இல்லாமல் 24க்கும் மேற்பட்ட லாக்அப் மரணங்கள் நடந்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடக்கலை. 2 பேரின் ஆட்சி தான் நடக்கிறது... ஒண்ணு போலீஸ் ஆட்சி, மற்றொன்று அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது.மின் கட்டணத்தை உயர்த்தியாச்சு, மாதாந்திர மின் கணக்கீடு கிடையாது. கேஸ் சிலிண்டருக்கு விலை குறைக்கல, ஆனா இப்போது புதிய டைட்டிலுடன் உங்களுடன் ஸ்டாலின் அல்ல... பொய்களுடன் ஸ்டாலின் என்று வைக்கலாம். இங்கு மக்களாட்சி கிடையாது, அதிகாரிகள் ஆட்சி தான். பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள் அமைத்தால் கல்வி வளர்ந்து விடுமா? 3600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 65000 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. வகுப்பறைகளில் எந்த வசதியும் கிடையாது. நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். நான் படிச்சு பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெறவில்லையா? கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்றால் படிக்க மாட்டார்களா? அது என்ன கான்செப்ட்? இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Perumal Pillai
ஜூலை 15, 2025 23:01

Ivanai கொஞ்ச காலம் வெளுக்க போட்டிருந்தனர் போலும்.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 19:47

கிட்டக்கூட நெருக்கமுடிவதில்லை. அந்த அளவுக்கு பாதுகாவலர்கள் இவரைசுற்றி. பிறகு இவர் எப்படி உங்களுடன் ஸ்டாலின் என்று கூறுவார்?


Vijay D Ratnam
ஜூலை 15, 2025 15:44

ஆமாம் ஸ்டாலின் பொய்தான்.சொல்றாரு. நல்லாட்சியை கொடுப்போம், நீட்டை ஒழிப்போம், மதுவிலக்கை அமல்படுத்துவோம், கல்விக்கடனை ரத்து செய்வோம், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம். காஸ் சிலிண்டருக்கு மான்யம் வழங்குவோம், பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம்னு சொன்னது எல்லாமே பொய் என்பது எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இங்கே யாரும் திமுக நேர்மையான கட்சி என்றோ, ஸ்டாலின் அறிவுஜீவி என்றோ, மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றோ ஒட்டு போடவில்லை. ஏங்க ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்து கையும் களவுமாக சிக்கி ஜெயிலில் அடைப்பட்டு கிடந்தவர்கள் என்று தெரியாமலா ஒட்டு போட்டார்கள் தமிழர்கள், நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை, 40 பர்சென்ட் கமிஷன், ஆட்கடத்தல், படுகொலைகள், பாலியல் பலாத்காரம், போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு இதெல்லாம் நடக்கும்தான் என்று தெரிந்து தானே ஒட்டு போடுறாய்ங்க. ஜெயக்குமார் அவர்களே, நீங்க காட்டமா பேசுனாலும் கிடந்தது கதறினாலும் இங்கே பள்ளிவாசல்கள் ஆணைப்படி இஸ்லாமிய வாக்குகள், பாதிரியார்கள் உத்தரவுப்படி கிருஸ்தவ வாக்குகள், பாஸ்டர்கள் வழிகாட்டுதல்கள் படி கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் வாக்குகள், அல்லொலியா வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு விழுந்தது, விழுகிறது, இனியும் விழும். அது மட்டுமல்லாமல் திமுக கொத்தடிமைகளுக்கு இணையாக திமுகவின் அல்லக்கைகள் என்று அன்போடு அழைக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் பல்க்காக திமுகவிற்கு வந்து சேர்ந்து விடுகிறது. இதுக்கு மேல ஹிந்து வாக்குகளில் நடுநிலை நக்கிகள் என்று பெருமையாக சொல்லப்படும் மானங்கெட்ட ஹிந்துக்கள் என்று ஒரு கேட்டகிரி உள்ளது. அந்த ஓட்டுகள் திமுகாவுக்குத்தான். தவிர பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், டெரரிஸ்ட், நக்ஸ்லைட்ஸ், மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் ஓட்டுக்கள் திமுகவின் பெர்மனண்ட் வோட் பேங்க். சோ திமுகவுக்கு 22 பர்சென்ட் ஓட்டுகள் ரிஸர்வ்ட்ல இருக்கும். ஆனால் நீங்க பார்லிமென்ட் தேர்தல் சமயத்துல கழட்டிப்போட்ட காலை சுத்துன பாம்பை மீண்டும் எடுத்து இப்போ இடுப்புல கட்டிக்கிட்டு ஒட்டு கேட்க போறீங்க. இதுல சபரீசன் பைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி வேறு இருக்கிறது. அது தனக்கு டெபாசிட் போனாலும் கூட திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுக பக்கம் சென்று விடாமல் டேமேஜ் செய்யும் வேலையை செவ்வனே செய்யும். இதையெல்லாம் மீறி நீங்க ஜெயிக்கனும். இது எல்லாவற்றுக்கும் மேலாக திமுக பாஜக கள்ள உறவு, அமித்ஷா கனிமொழி கள்ளக்கூட்டணி வலுவாக இருக்குது. உங்க கிட்ட இருக்கும் ஒரே ப்ளஸ் பாய்ண்ட் எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அண்ணா உருவம் பொறித்த கட்சிக்கொடி. இவை நான்கும் தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான ஒரு எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். மோடியை, மோடி அமைச்சரவையில் உள்ள அணைத்து அமைச்சர்களையும் நம்புங்கள், ஆனால் அமித்ஷாவை நம்பாதீர்கள். குடம் பாலில் துளி விஷம். அமித்ஷாவின் மண்டைகொழுப்பும், அண்ணாமலையின் வாய்கொழுப்பும் உங்கள் உழைப்பை பாழாக்கிவிடும். கவனமாக இருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை