உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது: ஜெயக்குமார்

எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது: ஜெயக்குமார்

சென்னை: எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ipj06k59&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது; எம்.ஜி.ஆர்., உடன் யாரையும் ஒப்பிட முடியாது. வரலாற்றில் முத்திரை பதித்த, யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அவர் சாதி, சமயம், வேறுபாடு பார்க்கவில்லை, அதேபோன்று மத ரீதியான அரசியல் செய்யவில்லை. இதை அண்ணாமலை ஒத்துக் கொள்கிறாரா? எம்.ஜி.ஆரை எல்லோருக்குமான தலைவர் என்று பலரும் பார்ப்பதை போல பிரதமர் மோடியை பார்க்கின்றனரா? அவர் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கூற வேண்டும் என்றால், சமூக நீதி அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.சமத்துவம் பார்க்கின்ற இயக்கம் அ.தி.மு.க. ஆனால் அந்த சமநிலையை பா.ஜ., பார்க்கிறதா? சமநிலை எங்கே உள்ளது? எந்த நிலையிலும் அவருடன் பிரதமரை ஒப்பிடவே முடியாது.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, எம்.ஜி.ஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பா.ஜ., தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Matt P
ஜன 21, 2025 06:04

எம்ஜிஆருடன் யாரையும். ...ஜெயலலிதாவை கூடவா?


கிருஷ்ணன்_பொள்ளாச்சி
டிச 24, 2024 19:49

திரு.முட்டை போண்டா அவர்களே நீங்கள் உங்கள் மகனுக்கு என்ன செல்வாக்கு உள்ளது என்று ஊர் அல்ல நாடு அறியும். உங்களை பொது வெளியில் பேச அனுமதிப்பதே அஇஅதிமுக அழிவிற்கு காரணமாக அமைகிறது... !!!


s chandrasekar
டிச 24, 2024 19:23

கூத்தாடி , நேர்மையான உலக தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர்


s chandrasekar
டிச 24, 2024 19:20

இவருக்கு மோடிஜி யார் என்று கூட தெரியாது.மோடிஜிக்கும் நடிகருக்கும் வித்தியாசம் தெரியாதவர் மோடிஜி அகிலஉலக ஆபத்பாந்தவன்.


R Bramananthan
டிச 24, 2024 18:34

மோடி ஓரு மாய பிம்பம். மோடியின் வளர்ச்சி சுய வளர்ச்சி அல்ல. வாஜ்பாய் அத்வானி விதைத்த விதை மரமாகி அதன் கீழ் தான் மோடி பிரதமராக இளைப்பாறுகிறார். எம் ஜிஆர் அப்படி அல்ல. நிச்சயமாக எம் ஜிஆருக்கு மோடி நிகரல்ல.


சம்பா
டிச 24, 2024 18:19

பி. சேபிக்கு ஜால்ரா தட்டினாதான் கருத்து பதிவார


ஆரூர் ரங்
டிச 24, 2024 18:05

அதிகபட்ச கதாநாயகிகளுடன் படங்களில் தோன்றியவர் எம்ஜியார். ஆனால் நடிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். அரசியலில் கருணாநிதியால் அவமதிப்புக்குள்ளாகியும் கூட அவரை மற்றவர்கள் மரியாதையுடன் நடத்தக் கட்டாயப்படுத்தியவர். ஆனால் மோதியின் இமாலய சாதனைகளுடன் ஒப்பிடுகையில் எம்ஜியார் பரங்கிமலைதான்.


Balamurugan
டிச 24, 2024 17:33

அடேய் அதே ஓட்டை வண்டியையே எதனை நாளுக்கு தான் ஓட்டுவீங்க? சினிமா மாயை தமிழக மக்களை கட்டிப்போட்டுள்ளது.


V வைகுண்டேஸ்வரன்
டிச 24, 2024 17:52

சினிமா மாயை பாஜகவைத்தான் கட்டிப்போட்டு ஆட்டுது. சில பாஜக தலைவர்கள் பாருங்க : நமீதா, கஸ்தூரி, கவுதமி, டான்ஸ் மாஸ்டர் கலா, குஷ்பு. இன்று காலை அண்ணாமலை, மோடியும் எம் ஜி ஆர் மாதிரி என்று பேசியிருக்கார். இப்போ சொல்லுங்க : யாரை சினிமா மாயை புடிச்சு ஆட்டுது??


N Sasikumar Yadhav
டிச 24, 2024 17:27

எம்ஜிஆருக்கும் மேலே மோடிஜி


அப்பாவி
டிச 24, 2024 16:35

கூத்தாடி கூத்தாடிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை