உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள்; நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அறிவுரை

கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள்; நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள் என்று அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான கே.பி. முனுசாமி கூறி உள்ளார். சென்னையில் நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முனுசாமி பேசியதாவது:மக்கள் வாக்களித்து பலமுறை நாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். பல்வேறு சூழலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 2014ல் கூட்டணியே இல்லாமல் தேர்தலில் நின்றிருக்கிறோம். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி போராட்டம் நடத்துவோம் என்று சொல்லும் அதே நேரத்தில் திண்ணை பிரசாரம் மிக மிக முக்கியம்.ஒவ்வொரு பூத்திலும் ஒரு கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சொல்லி இருக்கிறார். அந்த கிளையுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் மகளிரணி நிர்வாகிகள் ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்குச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.இன்னும் ஐந்தாறு மாதங்களுக்குள்ளாகவே கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சித் தலைவர்கள் பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள். கடுமையாக உழைப்போம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்போம்.நமக்கு இருப்பதோ 16 மாத காலம். இந்த காலத்தில் நாம் களத்தில் தான் இருக்க வேண்டும். பொருளாதாரம் இல்லை என்றால் கடன் வாங்குங்கள். கடன் வாங்குவது தப்பே இல்லை. எதுக்காக வாங்குறீங்க, நமது இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நமது கட்சி தொண்டன் மகிழ்ச்சியாக இருக்க கடன் வாங்கியாவது வெற்றியை பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

D.Ambujavalli
டிச 16, 2024 05:58

தொண்டனும், நிர்வாகியும் கடன்பட்டு உங்களை உட்கார வரிப்பணம். கடன் கொடுத்தவன் இறுக்கினாள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளட்டுமே, உங்களுக்கென்ன, பதவியில் உட்கார எது வேணுமானாலும் சொல்வீர்கள்


Natarajan S
டிச 16, 2024 05:17

கொடுக்க மணமில்லை?


PALANISWAMY S
டிச 15, 2024 23:36

நீங்கள் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்து விடுகிறோம்.


PALANISWAMY S
டிச 15, 2024 23:23

கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு வங்கிகளில் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்து விடுகிறோம்.


chails ahamad
டிச 15, 2024 23:10

எம் ஜி ஆர் என்ற மாயை வைத்து அரசியல் செய்த காலமெல்லாம் முடிந்து போன காலமாகும். கடன் வாங்கி அரசியல் செய்தாலும் பலனேதும் விளைவதற்கு வாய்ப்பில்லை.


Venkateswaran Rajaram
டிச 15, 2024 20:11

முனுசாமி எப்படி இந்த அளவு வசதி படைத்தவராக வாழ்கிறார் என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டால் சரி.. இந்த திருட்டு திராவிட கட்சிகள் இப்படித்தான் அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்


chinnamanibalan
டிச 15, 2024 19:28

தேர்தலுக்கு கடன் வாங்கி செலவு செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம், கடனை வட்டியும் முதலுமாக ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என்பதே. கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி நடந்த ஆட்சி செய்ததால், தமிழகம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் பட்டு, வட்டி கட்ட இயலாமல் தவிக்கிறது. இதில் மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சி எனில்,தமிழகம் திவால் தான்...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 19:14

நீங்க அதிகாரத்துக்கு வர, நோகாம நுங்கு திண்ண தொண்டன் கடன் வாங்கணுமா ????


Perumal Pillai
டிச 15, 2024 19:04

கொடநாடு எஸ்டேட் ஐ காப்பாத்த கூடிய கூட்டம்.


Mahalingam Laxman
டிச 15, 2024 19:03

If Munuswamy ready to sign as guarantor and keep his properties as security and ready to face banks once they are NOT elected could not loot the public money and repay the loan, the administrators can take loan.


சமீபத்திய செய்தி