உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு; இ.பி.எஸ்., அறிவிப்பு

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு; இ.பி.எஸ்., அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பேரணியை தொடங்கி வைத்தார். அவர், பா.ஜ.,வினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளை பறித்து இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gfk0dxjh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி விதிகளுக்கு மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர் அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தளவாய் சுந்தரம், 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subramanian Marappan
அக் 08, 2024 21:55

எம்ஜிஆர் என்ற தனிப்பட்ட வரின் செல்வாக்கு காரணமாக 1967&1971 தேர்தல்களில் திமுக வென்றது. எந்த கொள்கைக்காகவும திமுக வெல்லவில்லை. அதேபோல் கருணாநிதிக்கு ஏணி போல் ஆட்சி பீடத்தில் அமர உதவிய எம்ஜிஆர் காரியம் முடிந்தவுடன் எறிந்த கருணாநிதி மக்கள் செல்வாக்கு எம்ஜிஆருக்கு இருந்ததால் அவர் இறக்கும் வரை ஆட்சிக்கு வர முடியவில்லை.எம்ஜிஆர் தன் வெற்றிக்கு அண்ணாதுரையையோ பெரியாரைப் துணைக்கழைக்கவில்லை. அதிமுகவுக்கு விழுந்த ஓட்டு எம்ஜிஆர் புகழால் விழுந்த ஓட்டு. எடப்பாடி திமுக கட்சிக்கு துணை போகவே பிஜேபி கூட்டணியை முறித்தார். ஒட்டுண்ணி திமுகவை ஒழிக்க வேண்டுமானால் பிஜேபி கூட்டணி அவசியம்.


Murugesan
அக் 08, 2024 20:57

புரட்சித்தலைவர் கட்சியை அழித்த நயவஞ்சக எட்டப்பன் கொலைகார எடப்பாடி ,தீவிரவாத எஸ்டி பி கட்சியை கூட்டாளியாக சேர்த்த இந்த சுயநல அயோக்கியரை திகாரில் அடைக்கவேண்டும்


Kadaparai Mani
அக் 08, 2024 19:12

அதிமுக வினரின் இன்றைய போராட்டத்தில் திரளான நடுநிலை மக்கள் கலந்து கொண்டனர் .


பேசும் தமிழன்
அக் 08, 2024 18:20

இவர் SDBI போன்ற தீவிரவாத எண்ணம் கொண்ட ஆட்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்..... ஆனால் அவர் தேச பக்தி இயக்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டது குற்றமாம் ???


M.COM.N.K.K.
அக் 08, 2024 17:12

எடப்பாடியார் எப்படியும் கட்சியை அழித்துவிட்டுதான் மறுவேலைபார்ப்பார் என்று நினைக்கிறோம்.


sankaranarayanan
அக் 08, 2024 17:11

இப்படியே சென்றுகொண்டிருந்தால் கட்சி பீஸ் பீஸ் ஆக கிழிக்கப்பட்டு இடபாடியார் மட்டும் தனி மரமாக கட்சியில் விளங்குவார் தனிமரம் தோப்பு ஆகாது என்றுகூட தெரியாமல் ஒவ்வொருவரையாக கட்சியிலிருந்து நீக்கி தான் மட்டும் தர்பார் செய்ய துடிக்கிறார் துக்ளக் ராஜ்யமாக இருக்கிறது


mindum vasantham
அக் 08, 2024 15:07

அதிமுகவை சரியான பாதைக்கு கொண்டு வர நல்ல கால கட்டம்


Kumar Kumzi
அக் 08, 2024 15:04

எட்டப்பன் பாடிக்கு அழிவு நிச்சயம் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவான்


Narayanan
அக் 08, 2024 14:39

எடப்பாடிக்கு தலைகனம் வந்துவிட்டது. விசாரிக்க வேண்டி இருக்கிறது அதனால் நீக்கம் விசாரித்து குற்றம் இருந்தால் நீக்கி இருக்கலாம்தானே . என்ன அவசரம் கட்சி கலையும் 2026 க்கு முன்


Govinda raju
அக் 08, 2024 14:27

அடுத்து பி. சே.பி தான்


சமீபத்திய செய்தி