வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சோத்தைப்போட்டு அதிமுக தொண்டனை வளைக்க முடியாது.
திருநெல்வேலி : திருநெல்வேலியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி உள்ளிட்ட கட்சியினருக்கு, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், 110 உணவு வகைகளுடன் சைவ விருந்து அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ni7qlnb1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் நேற்று முன்தினம் பயணத்தை மேற்கொண்டவர், இரவு திருநெல் வேலியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். நேற்று காலை கட்சியினரை சந்தித்தவர், ஓய்வுக்குப் பின், இரவு 8:00 மணிக்கு திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள் பங்கேற்றனர். விருந்தில், நான்கு வகை சூப், அல்வா உட்பட 11 வகை இனிப்புகள், குஜராத்தி டோக்லா, பஞ்சாபி ஆலு பரோட்டா, டில்லி சோலே பட்டூர், போளி, சொதி உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், தோசை வகைகள், 16 வகை ஐஸ் கிரீம்கள் என மொத்தம் 110 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்து நிகழ்ச்சிக்குப் பின், அ.தி.மு.க., - பா.ஜ., தொண்டர்களிடையே பிணைப்பு ஏற்படும் என இரு கட்சித் தலைவர்களும் நம்புகின்றனர்.
சோத்தைப்போட்டு அதிமுக தொண்டனை வளைக்க முடியாது.