உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும்: விஜய பாஸ்கர்

அ.தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும்: விஜய பாஸ்கர்

கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பேசியதாவது:கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் 'நீட்' தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியம் திட்டம் அமல் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை, தி.மு.க., அறிவித்து, 3 சதவீதம் ஓட்டுகளை கூடுதலாகப் பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், தி.மு.க., அரசால், அதை ரத்து செய்ய முடியவில்லை. நீட் தேர்வை விலக்குவோம் என சொல்லி, தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தியது தி.மு.க., அப்படி கையெழுத்து பெறப்பட்ட பிரதிகள், சேலம் மாநாட்டில் சிதறி அடிக்கப்பட்டுள்ளன. இது தான் தி.மு.க.,வின் அக்கறை. பழைய ஓய்வூதியம் கேட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட துவங்கி உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டதால், தமிழக மக்களும், தி.மு.க., அரசு மீது வெறுப்பில் உள்ளனர். இதனால், தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராக வருவார்.ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஸ்பெயின் நாட்டில், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஸ்பெயின் சென்று இருக்கிறார். இப்படி பல வேடிக்கைகள் காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை