மேலும் செய்திகள்
ஒரே நாளில் 41 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
07-Sep-2025
சென்னை:' ஒவ்வொரு மாணவரும், தன் தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நட வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 1,747 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் படிக்கும் 41.25 லட்சம் மாணவர்கள், சுற்றுச்சூழல் மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் 30ம் தேதிக்குள், தங்கள் தாய் பெயரில் ஏதேனும் ஒரு இடத்தில், ஒரு மரக்கன்றை நட வேண்டும். மரக்கன்று நட்ட புகைப்படத்தை, 'மரம் நடும் திட்டம் 2.0' போர்ட்டலில் பதிவேற்றி, அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
07-Sep-2025