உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்கீல் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: திண்டுக்கல்லில் வக்கீல்கள் சாலை மறியல்

வக்கீல் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: திண்டுக்கல்லில் வக்கீல்கள் சாலை மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரோட்டில் விழுந்த மரத்தை அகற்றக்கோரி அமைச்சர் பெரியசாமியிடம் கோரிக்கை வைக்க சென்ற வக்கீலை அவரது உதவியாளர் மற்றும் தி மு.க.வினர் தாக்கினர். இதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் சுப்ராம்பட்டரையை சேர்ந்த வக்கீல் உதயகுமார், 40. இவர் அ.தி.மு.க. வக்கீல் பிரிவில் நிர்வாகியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே செயல்படும் பள்ளி அருகில் ரோட்டோரத்தில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதுவரை அந்த மரத்தை அதிகாரிகள் அகற்றவில்லை. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அந்த மரத்தை அகற்ற வேண்டும் என அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உதயகுமார். சென்றார். அப்போது அமைச்சரின் உதவியாளர், சில தி.மு.க.வினர் அங்கு சென்ற உதயகுமாரிடம் பேசினர். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் உதவியாளரான போலீஸ்காரரும். தி.மு.க.வினர் சிலரும் சேர்ந்து உதயகுமாரை, தாக்கினர். இதையறிந்த திண்டுக்கல் வக்கீல்கள், சப் கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அங்கிருந்த புறப்பட்ட வக்கீல்கள், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 17, 2025 21:02

திராவிட மாடல்?


Ramesh Sargam
பிப் 17, 2025 19:53

இப்பொழுது சாலை மறியல் செய்யும் வக்கீல்களை திமுக போலீஸ் தாக்கும்.


முக்கிய வீடியோ