உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலில் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

நெல் கொள்முதலில் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

விருதுநகர்:''தமிழகத்தில் அரசு சாரா கொள்முதல் மையங்கள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்,'' என, காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலர் அர்ச்சுனன் கூறினார். அவர் கூறியதாவது:தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் பெடரேஷனுடன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்துள்ளது.அரசு நேரடி கொள்முதலுக்கு பதிலாக பெடரேஷன் தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்போகிறது. இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்சிகள் கொள்ளை அடிப்பதை தடுக்கவே அரசு நேரடி கொள்முதல் துவக்கப்பட்டது.தற்போது மீண்டும் தனியார் வசம் நெல் கொள்முதல் ஒப்படைக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்படுகிறது. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி