உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாண் உதவி அலுவலர்கள் நில அடங்கல் சான்று வழங்க உத்தரவு

வேளாண் உதவி அலுவலர்கள் நில அடங்கல் சான்று வழங்க உத்தரவு

கம்பம் : வேளாண் உதவி அலுவலர்கள் நிலத்தின் அடங்கல் சான்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிலத்தின் உரிமையாளர்பெயர், நிலத்தின் பரப்பு ஆகிய தகவல்களை உள்ளடக்கியது சிட்டா. ஒரு நிலம் நன்செய் அல்லது புன்செய் நிலமா, என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது, எவ்வளவு பரப்பு, புலம் போன்ற விபரங்களை கொண்டது அடங்கல். இதுவரை சிட்டா, அடங்கல் ஆவணங்கள் வி.ஏ.ஒ.,க்களிடம் இருந்தது. சமீபத்தில் மத்திய வேளாண் அமைச்சகம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்க விவசாயிகளின் நிலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய திட்டத்தை அறிவித்தது. 2025 மார்ச்சுக்குள் கிராப் சர்வே விபரங்களை சமர்ப்பிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட வி.ஏ.ஓ.க்கள் மறுத்ததால் வேளாண், தோட்டக்கலை கல்லூரிகளில் பயிலும்20 ஆயிரம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இணைந்து கிராப் சர்வே பணியில் ஈடுபட்டனர். இப்பணி 2024 நவ.,16ல் முடிவிற்கு வந்தது.தற்போது டிஜிட்டல் அடங்கலை வேளாண் துறையினரும், அதே நேரம் வி.ஏ.ஓ..க்களும் அடங்கலைபராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உதவி வேளாண் அலுவலர்களும் அடங்கல் வழங்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண் வங்கி கடன், வேளாண் துறை வழங்கும் பயிர் மானியங்கள், இடுபொருட்கள், விதைகள் வாங்க அடங்கல் தேவைப்படும். வி.ஏ.ஒ.,க்களும், வேளாண் துறையும் அடங்கலை பராமரித்து வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள்அடங்கல் சான்றிதழ் பெற வி.ஏ.ஓ., க்களையே நாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை