உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் ஏஐ: எல்லை மீறும் இளசுகள்

செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் ஏஐ: எல்லை மீறும் இளசுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைககள் உள்ளிட்ட செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் நோக்கில் எடிட் செய்து இணையத்தில் பரப்பும் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் டீப்பேக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திரிஷாவின் வீடியோவும் வைரலாகி உள்ளது.இன்றைய உலகம் தொழில்நுட்பத்தையே அதிகம் சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதை விட, அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளையும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். குறிப்பாக உலகை தற்போது ஆட்டிப்படைக்கும் 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்ததில் இருந்து, எல்லா துறைகளிலும் பெரிதும் உதவிப்புரிகிறது. ஆனால், இந்த 'ஏஐ' தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றனர்.ஏஐ.,யை பயன்படுத்தி சிலரை அசிங்கப்படுத்துகின்றனர். அதிலும் செலிபிரட்டிகளை ஏஐ மூலம் நெட்டிசன்கள் அவர்களின் இஷ்டத்திற்கு எடிட் செய்து பரப்புவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக 'டீப் பேக்' மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து பரப்பினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கூட, தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என வலியுறுத்தினார். பின்னர் எடிட் செய்தவர்களை போலீசார் கைது செய்ததால், இந்த விவகாரம் கொஞ்சம் குறைந்தது.

டிரம்ப் - கமலா ஹாரிஸ்

சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரெதிரே களமிறங்கிய டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஒன்றாக பீச்சில் நடந்து வருவது போலவும், முத்தமிடுவது போலவும் ஏஐ வீடியோ வைரலாக பரவின. இப்படி ஏஐ தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக தவறான வழியில் பயன்படுத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

திரிஷா

அந்த வகையில், தற்போது 'தி கோட்' படத்தில் விஜயுடன் திரிஷா நடனமாடினார். அதே கெட்டப்பில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரிஷாவும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடிப்பது போலவும், லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்றும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். அனுமதி இல்லாமல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இப்படி செய்வது குற்றம் எனவும், இதுபோன்று சித்தரித்து கேவலப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இனிவரும் நாட்களில் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
செப் 23, 2024 20:56

சமூகவலைத்தளத்தில் அரசின் அனுமதி இன்றி யாரும் வெளியிடக்கூடாது என்று சட்டம் கொண்டுவருவது தான் சரி. சீனா சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


Nallavanaga Viruppam
செப் 23, 2024 17:16

இளசுகளை குறை சொல்வதை விட்டுவிட்டு, சகித்து கொண்டு செல்வது தான் சிறந்தது. கலிகாலம் ஆனதடி கண்மணினு பாட்டு பாடலாம்...


Natchimuthu Chithiraisamy
செப் 23, 2024 16:44

ஒரே சமயத்தில் பல இளசுகள் எடிட்ட் செய்கிறார்கள் யாரை போலீஸ் கைது செய்யும்


கத்தரிக்காய் வியாபாரி
செப் 23, 2024 16:25

அறிவியல் இல்லாத காலத்தில் கோள்கள் எப்படி இயங்குகிறது என்று கண்டுபிடித்த நம் முன்னோர்கள் இந்த மாதிரி அறிவியலை கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகிருக்காது. எதாவுது கண்டுபிடித்தால் அது மனிதகுலத்திற்கு பயன்படுமா என்று தெரிந்துதான் நமக்கு நல்லவைகளை விட்டு செண்டு உள்ளார்கள்.


MP.K
செப் 23, 2024 14:27

பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் புரிதல்கள் அவசியம்


Ramesh Sargam
செப் 23, 2024 13:19

ஒருசில தொழில்நுட்ப வளர்ச்சிகள், மனிதர்களுக்கு பல வீழ்ச்சிகளை ஏட்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது மக்கள் அதி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முடிந்த அளவுக்கு தங்களது புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிடுவதை நிறுத்தவேண்டும். இல்லையென்றால் காத்திருக்கிறார்கள் அயோக்கியர்கள் ... அந்த புகைப்படத்தை மாற்றி தவறாக பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்...


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2024 13:11

அதுவும் தவறுதான்.


subramanian
செப் 23, 2024 12:58

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்படித்தான். நல்லவர்கள் தகுதியானவர் கள் மட்டுமே இதை கற்க வேண்டும். உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்.


SUBBU,MADURAI
செப் 23, 2024 12:58

இந்த AI தொழில் நுட்பத்தால் வருங்காலத்தில் பல பிரச்சனைகள் வரிசை கட்டி வர காத்திருக்கின்றன!


SANKAR
செப் 23, 2024 12:50

ever remember one kannada Prasad and what he said a decade ago,?!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை