உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடையை மீறி போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது

தடையை மீறி போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த வகையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலை வளாகத்தின் வெளியே அ.தி.மு.க., சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க., போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அண்ணா பல்கலை வளாகத்தின் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க.,வினரை அடையாறிலேயே மடக்கி போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவர்களுக்கு கருப்பு பட்டை கொடுக்க முயன்றதையும் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்றும் இந்தியன்
ஜன 06, 2025 16:39

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஏவல் அடிமை துறையே எப்போ பார்த்தாலும் எதிர்கட்சிகளை ஏதோஒரு தண்டமான் காரணம் சொல்லி கைது செய்வதே வாடிக்கையாக கொள்கையாக கொண்டவர்களே கொஞ்சமாவது அறிவு பூர்வமாக ஆலோசியுங்கள்


KumaR
ஜன 06, 2025 10:41

அந்த குற்றவாளி பக்கத்துல நீ நின்னு விளக்கு புடிச்ச மாரி பேசுற.. அவன் நடிச்சான் உனக்கு எப்படி தெரியும்.. திருட்டு திராவிடர்களை கொத்தடிமை கூட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணை தப்பா பேசுறது அவங்க பரம்பரை புத்தி.


Barakat Ali
ஜன 06, 2025 10:10

இந்த வழக்கில் ப்ரொபஸர் குண்டர் இங்கே பதறுகிறாரே...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 09:49

யாரோ சாருக்கு போனில் பேசற மாதிரி ஒரு குற்றவாளி நடித்திருக்கிறான் அதை, புதருக்குள் காதலுடன் இரவில் நெருக்கமாக இருந்து ஒரு குற்றவாளியிடம் மாட்டிக்கொண்ட அந்த பெண் தான் நம்பிவிட்டார் என்றால், ஊடகங்களும், அரசியல்வாதிகளுமா நம்புகிறார்கள்??


M Ramachandran
ஜன 06, 2025 09:32

அப்பாடா காவல் ஏவல் துறை தன்னிச்சையாக செயல் செய்திருக்கிறது


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 09:30

ஒரு குற்றம் நடந்தது. புகார் கிடைத்த 10, 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது. FIR போட்டாச்சு. அது எல்லோருக்கும் தெரிந்தும் விட்டது. தனிக்குழு அமைத்து நீதிமன்றம் வேறொரு விசாரணை யும் நடக்கிறது. இதுக்கு மேல என்ன செய்ய வேண்டும்? நிஜமாகவே தெரியவில்லை.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 09:26

எவனோ ஒரு குற்றவாளி போனில் சொன்னதை நிஜம் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பியிருக்கிறார். அந்த போன்கால் நிஜம் தானா அல்லது ஆன் செய்யாத போனில் பேசற மாதிரி ஆக்ட் குடுத்தானா? இதெல்லாம் யோசிக்கவே மாட்டார்களா? அறிவுகெட்டத்தனமாக, "யாரோ சொன்னதை நம்பிண்டு யார் அந்த சார் னு கூவிக்கொண்டு திரிகிற கோமாளிகள் பார்த்து சிரிப்பு வருகிறது. இதை யோசிக்காமல், இங்கே வந்து என் மீது தனிமனித விமர்சனம் எழுதப் போகிறார்கள்.


karupanasamy
ஜன 06, 2025 09:04

விடியல் போலீசு கோர்ட்டில் அவகாசம் வாங்கி அதற்குள் விடியல் ... முடிந்துவிடும்.


பாமரன்
ஜன 06, 2025 08:56

இன்னிக்கும் இந்த மேட்டர்ல ப்ராக்சிகள் கருத்து பகுதியில் இறக்கி விடப்படுவார்களா... பார்ப்போம்


கிஜன்
ஜன 06, 2025 08:33

வை .கோ கிட்ட பழைய கருப்பு பலூன் ஸ்டாக் நெறய இருக்காம் ..... வேணும்னா சலுகை விலையில் தருவார் ...


சமீபத்திய செய்தி