உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிப்.24ல் அதிமுக., மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

பிப்.24ல் அதிமுக., மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னை: வரும் பிப்.,2 4ல் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கட்சி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள், அணியில், வீரர்களை அதிகளவில் சேர்ப்பது தொடர்பான பணிகளை முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் 89 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இ.பி.எஸ்., நேற்று உத்தரவிட்டு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bye Pass
பிப் 19, 2025 22:15

சசிகலா தினகரன் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியில் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும். EPS அனுசரித்து போகாவிட்டால் அவரை தலைமை பொறுப்பிலிருந்து நீக்கி விடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை