உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னையில், அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அனைத்து முன்னணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் என்னென்ன?

* பெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம்.* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தீர்மானம்.* திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்.* பார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய, தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு வலியுறுத்தி தீர்மானம்* ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.* இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.* தமிழகத்திற்கு நிதி பகிர்வை பாரபட்சமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்* 2026ல் இ.பி.எஸ்.,ஐ மீண்டும் முதல்வராக்குவோம் என தீர்மானம். கூட்டத்தில், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி, உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றி பொதுக்குழுவில் முக்கிய ஆலோசனை செய்யப்பட உள்ளன. அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

திண்டுக்கல் சரவணன்
டிச 15, 2024 21:41

/இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய...../ இவர்கள் எல்லாம் நாட்டுக்காக தியாகம் செய்தவர்களா என்ன. உண்ட வீட்டுக்கே துரோகம் செய்த இவர்கள் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறைவேற்றவேண்டும். இந்து உணர்வு வளர்வது அதிமுகவுக்கு தெரியாமல் இருப்பது வினோதம். முஸ்லீம் ஒட்டு அதிமுகவுக்கு கிடைக்கப்போவது இல்லை. இஸலாமிய சிறைகைதிகள் ஆதரவு நிலை இந்து உணர்வுள்ள வாக்காளரை பாஜக பக்கம் தள்ளும்.


திண்டுக்கல் சரவணன்
டிச 15, 2024 21:29

/மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்./ - ஹிந்தி பெயர் கூடாது என்றால் ஆங்கில பெயர் அதைவிட கூடாது. அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு.


sundar
டிச 15, 2024 20:04

சிறுபான்மை ஓட்டு என்னும் பைத்தியம் பிடித்து அலையும் எடப்ஸ் ஐய்யா, சிறைக்கைதிகள் என்ன தேச சேவை செய்து உள்ளே போனார்களா?இஸ்லாமியர்கள் என்ன ஆனாலும் திமுக வுக்குத் தான் வாக்களிப்பார்கள்.அவுங்க டிசைன் அப்படி


vadivelu
டிச 15, 2024 19:45

இஸ்லாமியர் தவறு செய்தவர்களாக இருந்து, நீதி மன்றம் சிறை தண்டனை கொடுத்து இருந்தால், என்ன அவர்களை விடுவிக்க வேண்டும் ? தலை கீழாக நடந்தாலும் இனி இஸ்லாமியர்களின் வாக்குகள் அண்ணா தி மு க விற்கு இல்லை என்பதை உணருங்கள்.


Raja Vardhini
டிச 15, 2024 19:43

மறுபடியும் எடப்பாடி அவர்கள் முதல்வர் ஆவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...


karthikeyan
டிச 15, 2024 17:13

அ.இ.அ.தி.மு.க. தீர்மானமா இல்லை தி.மு.க விற்கு எதிரான கண்டனமான்னு தெரியவில்லை...


M Ramachandran
டிச 15, 2024 16:57

பிரியாணி அண்டா மற்றும் பாட்டில்களின் ஓசையுடன் முடிந்தது.


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 15:54

மக்களுக்கு, அதிமுக என்ன செய்யப் போகிறது என்று தீர்மானங்களில் எதுவும் இல்லை.


Venkateswaran Rajaram
டிச 15, 2024 15:41

அரசியல் தொழில் முனைவோர் வியாபாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம்


Murugesan
டிச 15, 2024 14:53

திராவிட பங்காளி கூட்டு களவானி அயோக்கியனுங்கள், சுடாலினுடன் சேர்ந்து தமிழகத்தை சீரழித்த கொள்ளைக்கார அயோக்கியர்கள்


முக்கிய வீடியோ