உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக கொள்கை எதிரி அல்ல; பழனிசாமி மீது காழ்ப்பு இல்லை; திருமாவுக்கு வந்தது திடீர் பாசம்!

அதிமுக கொள்கை எதிரி அல்ல; பழனிசாமி மீது காழ்ப்பு இல்லை; திருமாவுக்கு வந்தது திடீர் பாசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அதிமுக எங்களுக்கு கொள்கை எதிரி அல்ல. அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விடுதலை சிறுத்தை கட்சி குறித்து பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் பாஜவின் வழிகாட்டுதலின்படி, அவர் இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் விடுதலை சிறுத்தை கட்சி பாஜவை தான் கொள்கை பகையாக முன்னிறுத்துகிறது தவிர, அதிமுகவை அவ்வாறு முன்னிறுத்தவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sua32gv8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதுகில் சவாரிபாஜவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல. மஹா., வில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜ தான் காரணம். இப்படி பல உதாரணங்களை, சான்றுகளை காட்ட முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் காலூன்றி வருகிறது பாஜ. பலவீனப்படுத்த முயற்சிஅதை உத்தியை தமிழகத்திலும் பாஜ கையாள்கிறது. கடைபிடித்து வருகிறது. அதிமுகவை பயன்படுத்தி இங்கே வளர துடிக்கிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள். அவர்கள் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்து விட வேண்டும் என்ற பதைப்பு தான் பாஜவுக்கு மேலோங்கி இருக்கிறது.தோழமை உணர்வுஇதை தான் விடுதலை சிறுத்தை கட்சி சுட்டிக் காட்டுகிறோம். அதிமுக மீது ஒரு தோழமை உணர்வு இருக்கிறது. அது பாழ்பட்டு விடக்கூடாது, சிதைந்து விடக் கூடாது என்கிற பொறுப்புணர்வோடு தான் இதை சுட்டிக் காட்டுகிறோம் தவிர, அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில் இருப்பதால் தான் பாஜவையும், அதிமுகவையும் விமர்சிக்கிறோம் என்று பலர் கருதுகிறார்கள்.விமர்சிப்போம்திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கையை விடுதலை சிறுத்தை கட்சி ஒருபோதும் ஏற்காது. ஏற்கனவேயும் விமர்சித்து இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். பாஜ- அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அதிமுக ஒரு திராவிட இயக்கம். ஈவெரா கொள்கையை பேசுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்புணர்வோடு தான் முன் வைக்கிறோம். அது தேவையற்றது என்றால் நாங்கள் பேசப் போவதில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஜூலை 25, 2025 08:12

எதற்கும் விடியல் தலைவர் இவரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிமுக மீது அதிக பாசம் பொங்கி வழிகிறது..... பிளாஸ்டிக் சேருக்கு பதில் இரும்பு சேர் கொடுக்கிறோம் என்று கூறினால்.... கூட்டணி மாற வாய்புள்ளது....ஸ்டாலின் அய்யா சூதானமாக இருந்து கொள்ளுங்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 25, 2025 08:04

கட்டுமரத்தால் காணாமல் போன கட்சிகள் தமிழகத்தில் ஏராளம்.... அதே போன்ற நிலை வி சி க கட்சிக்கும் ஏற்படலாம்.... அந்த பயம் தான் இவனை இப்படி திமுக கட்சிக்கு முட்டு கொடுக்க வைக்கிறது..... இவன் மட்டும் திமுக கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசட்டும்..... ரவிக்குமார்.... வன்னியரசு.... சிந்தனை செல்வன்..... மார்க்க ஆள் ஷாநவாஷ் போன்ற ஆட்கள் வரிசைகட்டி.... திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்..... அந்த பயம் தான் இவனை இப்படி எல்லாம் பேச வைக்கிறது.... திமுக உடன் இருந்தால் கட்சி ஆட்கள் யாரும் தேர்தலில் வேலை செய்ய மாட்டார்கள்.


Thravisham
ஜூலை 25, 2025 07:53

தாழ்த்தப் பட்ட மக்கள் என்று யாருமே இல்ல. அவர்களை வைத்து இவனுக்கு பிசினஸ். இவனுடைய வயிறு வீங்குவதற்கு அவர்கள் தான் கிடைத்தார்களா? அவர்களை படிப்பில் முன்னேற்றி / வேலைவாய்ப்புகளை பெருக்கி/குடிப் பழக்கத்தை கட்டுப்படுத்தி / நேர் வழி படுத்த முடியாதா ? எப்போ பாரு திராவிடம் என்று சொல்லி சொல்லி அவர்களை ஏமாற்றி கொண்டிருப்பதுதான் ஒன்னோட நோக்கமா? காசுக்கு நாயாக அலைந்து பொய்க்கு வக்காலத்து வாங்குவதுதான் லட்சியமா


ஏவர்கிங்
ஜூலை 25, 2025 06:24

கழிச்சல் ...


Naga Subramanian
ஜூலை 25, 2025 05:55

இதெல்லாம் நமது சாபக்கேடு. பிரதானம், ஒட்டு வாங்குவது, மற்றும் பதவி மோகம். வேறு எந்த கொள்கை கூந்தலும் கிடையாது.


kr
ஜூலை 25, 2025 05:43

Looks like he will join the admk led alliance soon. He will say - we are in alliance with admk only, but admk is also in alliance with BJP.


xyzabc
ஜூலை 24, 2025 22:50

குருமாவிற்கு வேற வழி இல்ல. கரி அடுப்பை வூதி கொண்டுதான் இருக்கனும். மாடல் அரசுக்கு எப்பவோ surrender ஆகி விட்டான் .


Oviya Vijay
ஜூலை 24, 2025 21:49

இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் கண்டுபிடிப்பீர்களேயானால் இவரும் என்ன செய்வார் பாவம்... எப்படியாவது இவர் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட மாட்டாரா என்று பலரும் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர் என்பது 100 சதவீதம் உண்மை... ஆனால் இவர் கூட்டணியை விட்டு கண்டிப்பாக வெளியேறப் போவதில்லை... கூட்டணித் தலைமையோடு இவர் இணக்கமாகச் செல்வாரேயன்றி அதிமுக பிஜேபி கூட்டணியில் இருக்கும் பிணக்குகள் போல் திமுக கூட்டணியில் இருப்பதற்கு வாய்ப்பில்லை... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி பெற்ற 40க்கு 40 என்ற வெற்றிக் களிப்பில் இருக்கும் இவர்கள் இருந்த இடமே சுகம் என்று கூட்டணியில் தொடர்வார்களேயன்றி வெளியேறிட எள்ளளவும் துணிய மாட்டார்கள்...


Kumar Kumzi
ஜூலை 25, 2025 01:08

என்ன செய்ய இந்த ஆளுக்கு சரி ஒரு பிளாஸ்டிக் ஷேர் கெடைக்கும் நீ வாழ்நாள் முழுதும் இன்பநிதிக்கும் சலூட் தானே அடிக்கணும்


A viswanathan
ஜூலை 25, 2025 05:21

இந்த ஆளை நம்பி கூட்டணியில் சேர்க்க வேண்டாம்.


vivek
ஜூலை 25, 2025 06:34

ஓவியரே பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது...பாவம் இதயம் பத்திரம்....எதற்கும் ஆஞ்சியோ பாருங்க


Venukopal, S
ஜூலை 25, 2025 08:04

எல்லோருக்கும் தேசப்பற்று, 200 க்கு மாடல் பற்று.


பேசும் தமிழன்
ஜூலை 25, 2025 08:08

என்னப்பா உங்கள் இண்டி கூட்டணி ஆள் திருமா.... அவரையே குறை சொல்ற.... 200 க்கு பதில் 400 வந்து விட்டதா... கூவல் அதிகமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை