உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி டென்ஷன்

கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி டென்ஷன்

மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளது. அதிகாரிகளுடன் தொடர்புள்ள தி.மு.க., புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியே போர்க்கொடி துாக்கியுள்ளதால், தி.மு.க., தலைமை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுக்க அ.தி.மு.க., கோட்டை விட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் ஆயிரக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி வரிக் குறைப்பு செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் அது உறுதியானது. இதுகுறித்து 2024ல் கமிஷனராக இருந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடக்கிறது.

அமைச்சர் தொகுதி முன்னிலை

மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அமைச்சர் தியாகராஜன் தொகுதியான மத்திய தொகுதியில் உள்ள மண்டலம் 3ல் தான் அதிக முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. உடனே அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் (பொறுப்பு) ரங்கராஜன், தற்போதைய உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், புரோக்கர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.

55 பேர் பட்டியல் தயார்

கைதானவர்களிடம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி நடத்திய விசாரணையில், 100 வார்டுகளிலும் சில மண்டல தலைவர்கள், தி.மு.க., பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையை மேலும் தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடி உருவாகும் என்பதால் அடுத்த விசாரணைக்காக ஆளுங்கட்சி தலைமையின் சிக்னலுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.இந்த விவகாரத்தை தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கையில் எடுத்துள்ளது. 'முறைகேடு தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், மிகப்பெரிய நெட் ஒர்க் மூலம் முறைகேடாக உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய 5 மண்டலங்களிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுமதிப்பீடு செய்து முறையான வரிவிதிக்க வேண்டும்' எனவும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வுக்கு நெருக்கடி

இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து சென்றால் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியாது. நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.,வினர் பலர் சிக்கி, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தி.மு.க., தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வினர் கூறியதாவது: சமீபத்தில் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய சம்பவத்தில் அத்தொகுதி எம்.எல்.ஏ., உதயகுமார் போலீஸ் அனுமதியை மீறி சம்பவ இடத்திற்கு சென்றார். போலீஸ்காரர், ஸ்டேஷனை தாக்கியோரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார். இது ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுபோல் தற்போது மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளது.எதிர்கட்சியான அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் விதிமீறி வரிவிதிப்பு குறித்து ரூ.150 கோடி முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டியது. முறைகேட்டில் மாநகராட்சி அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க., ஏனோ இதுவரை அமைதி காக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கொடி பிடித்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

reghupathy umashankar
ஜூலை 01, 2025 22:39

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலின் உறைவிடங்கள்.காமராசர் சொன்னதுபோல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்ததாக தி.மு.க வினராலே குற்றம்சாட்டப்பட்ட அனிதா இராதாகிருஷ்ணன் , ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி , கே.கே.எஸ்.எஸ்.ஆர் ., எ.வ. வேலு, ரகுபதி போன்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் தி.மு.க. விற்கு தாவியவுடன் திராவிட புனித நீரில் தோய்த்தெடுக்கப்பட்டு ஊழல் கறைகள் நீக்கப்பபடுகின்றன. திறமைக்கு? தகுந்த பொறுப்புகள் உடனே வழங்கப்படுகிறது. இந்த விடயத்தில் பி.ஜே.பி .யும் தி.மு க.வும் ஒத்த கொள்கையுடையவர்கள். மொத்தத்தில் ஊழல்வாதிகள் எங்கிருந்தாலும் வாழ்வர்.


Sitaraman Munisamy
ஜூலை 01, 2025 21:55

அதிமுக கூட்டாளியாக இருக்கலாம்


Yogesh Palanichamy
ஜூலை 01, 2025 19:15

கம்யூனிஸ்டுகள் சத்துக்கள் என்றால் மித்திரர்கள் யாரையா? பாஜகவா? நல்ல ஆளய்யா நீர்? உம்மையெல்லாம் வைத்துக் கொண்டு.......


Yasararafath
ஜூலை 01, 2025 16:44

முறைப்படி பார்த்தால் இரண்டு கட்சியுமே கோட்டை விட்டு இருக்கு


Karadiappan V
ஜூலை 01, 2025 09:13

எதிர் கட்சி தலைவரும் இதில் ஒரு பங்கு வாங்கி இருப்பார் விசாரணையில் தெரியவரும்...


Bhaskaran
ஜூலை 01, 2025 08:15

துண்டில் குலுக்கி கள் இந்த விஷயத்தை பயன்படுத்தி ஸ்வீட் பாக்ஸ் அதிகம் கேட்பார்கள்


subramanian
ஜூன் 30, 2025 19:50

பழனிசாமி யின் திறமைக்கு இது சான்று


S Srinivasan
ஜூன் 30, 2025 15:14

admk also may be party in looting. when admk lost their money in one of tge admk ex minister benami home dmknleaders extending help to find out ellam namma திருட்டு கும்பல் யார்ரா இருந்தாலும் என்ன லஞ்சம் வாங்குவத்தில் இரு கழகமும் சூப்பர் சுப்ரயங்கள்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 30, 2025 09:57

சங்கம் வைத்து தமிழ் வளர்த்து சரித்திர முக்கியம் வாய்ந்த ஆன்மீக நகரமாக இருந்த மதுரை எம்பதியை, பொய்பித்தலாட்டம் மிகுந்த நகரமாகிய மாற்றிய பெருமை திராவிட கும்பலையே சாரும். பிறர் உணவில் மண்ணை அள்ளி போடும் கம்யூனிசத்ருக்களும் இதற்கு ஒரு காரணம்..


GMM
ஜூன் 30, 2025 09:40

மாஸ்டர் ரோல் புகழ், திராவிட இயக்கம் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு அதிசயம் இல்லை . வரி வசூல் தெளிவான கிரய பத்திர பதிவு மற்றும் ஆட்சேபனை இல்லாத பத்திரம் மீது மட்டும் வசூலிக்க வேண்டும். மற்றவை விற்பவர் வாங்குபவர் கூட்டு பெயரில் பதிய வேண்டும். அல்லது தாசில்தார் மற்றும் குடியிருபவர் கூட்டு பெயரில் இருக்க வேண்டும். வரி செலுத்தி மட்டும் சொத்து உரிமை கொண்டாட இடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாக முறை பல ஆன்லைன் மூலம் கொண்டுவர வேண்டும். அனைத்து பணிக்கும் ஒருவருக்கு ஒரு உள்ளாட்சி அமைப்பு எண் வழங்க வேண்டும்.


முக்கிய வீடியோ