வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் அதிமுகவினர் பயன்படுத்துவார்கள்.
மருத்துவமனை வரும் நோயாளிகளை, 'மருத்துவ பயனாளர்' என அழைப்பதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சிக்கிறார். அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ப, பெயரை மாற்றி வைப்பது வழக்கம். மருத்துவமனை வரும் நோயாளி மனம் புண்படக் கூடாது என்பதாலேயே, 'மருத்துவ பயனாளர்' என பெயரிட்டுள்ளோம். அதில், இலக்கண தப்போ, கருத்து தப்போ எதுவும் இல்லை. கம்ப ராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்பதை கூட சொல்ல தெரியாதவர் பழனிசாமி. அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை தருபவர், முதல்வர் ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க.,வினர், எம்.ஜி.ஆரை கூட மறந்து விட்டனர். ஸ்டாம்ப் அளவு கூட, எம்.ஜி.ஆர்., படத்தை வைப்பதில்லை. கோவை மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பெயரை, சூட்டியதை, மக்கள் பாராட்டுகின்றனர். 'நாயுடு' என்ற ஜாதி பெயரை மாற்ற வேண்டுமா என்பதை, அவரது குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். -- வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,
தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் அதிமுகவினர் பயன்படுத்துவார்கள்.