உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்

சென்னை: சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சட்டசபையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். 'டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை பற்றி விவாதிக்க முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mfik5g5o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சஸ்பெண்ட்

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியபோது பேச அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்று (ஏப்ரல் 07) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

13 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்!

தமிழக சட்டசபையில் பதாகையை காட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்:அக்ரி கிருஷ்ணமூர்த்திஅசோக்குமார்சம்பத்குமார்இசக்கி சுப்பையாமரகதம்அம்மன் அர்ஜூனன்பொன் ஜெயசீலன்செந்தில் குமார்ஜெயக்குமார்பாலசுப்பிரமணியம்நல்லதம்பிசித்ராமரகதம் குமரவேல்பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு பிரச்னையை கிளப்பி, அதற்கு பிறகு விவாதங்கள் நடைபெற்று, சபாநாயகர் ஒரு விளக்கம் தந்து, திருப்தி அடையாமல் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

அந்த தியாகி யார்?

அதே நேரத்தில் நான் சொல்ல விரும்புவது, கையில் பதாகையை ஏந்தி இருந்தார்கள். அதில்'அந்த தியாகி யார்...அந்த தியாகி யார்.... அந்த தியாகி யார்...என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தாங்கள் சிக்கி இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யாருடைய காலில் போய் விழுந்தார்.

நொந்து நூடுல்ஸ்

நொந்து போய் நூடுல்ஸ் ஆக இருக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதல்வர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் போய் விழுந்து, அந்த அம்மையாரை ஏமாற்றியவர் தான் இன்று தியாகி ஆக இருக்கிறார். தியாகிகள் என்று எழுதி பதாகைகளை கொண்டு வந்ததால், நான் இந்த விளக்கத்தை தருகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Ramakrishnan
ஏப் 07, 2025 18:44

ஒரு நாள் சஸ்பெண்ட் ஒரு தண்டனையா? அவங்க ஆட்சியில் ஜெ. அன்பழகனுக்கு என்னவெல்லாம் தண்டனை கொடுத்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.


Mediagoons
ஏப் 07, 2025 18:20

இந்து மதவாத இந்தி இனவாத கும்பலுடன் சேர்ந்து தமிழகத்தை சீர்குலைக்கும் கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை . இது பெரியாரின் பூமி


sethu
ஏப் 07, 2025 17:19

ஏம்பா இந்த ஆளு லூசுன்னு சொன்னானுக ஆனால் நல்லாத்தானய்யா சட்டையெல்லாம் போட்டுருக்காரு அப்புறம் யாரோ ஒரு அம்மையார் காலில் விழுந்து பதவியை பிடித்தார் அந்த அம்மையாரையும் ஏமாற்றியவர்தானே இவரு என தெளிவாக வேற பேசுறாரு, ஆனால் ஓன்று கையை காலாக நினைத்து என அப்பன பிணத்தை கூவம் ஆற்றின் கரையில் புதைக்க அனுமதிக்கணும் என காலில் விழுந்தது உனக்கு மறந்துபோகலாம் ஆனால் எங்களுக்கு மறக்கவில்லை .


jayaram
ஏப் 07, 2025 14:00

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பழகுங்க அதைவிட்டு முன்னர் இதை செய்தீர்கள் அதை செய்தீர்கள் என்று கவனத்தை திருப்பாதீர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்


Ramesh Sargam
ஏப் 07, 2025 13:03

பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவே பதவி விலகு.


xyzabc
ஏப் 07, 2025 12:22

அடுத்த ஜூனில் விலகி விடுவார்


MP.K
ஏப் 07, 2025 12:13

In politics, all hands are dirty now, there is no exceptions in this regard. It is common worldwide, i think.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை