உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: '' பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வரும் போது அது குறித்து பதில் சொல்கிறேன். பா.ஜ., பா.ம.க., இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என நிலையான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது. அதனை ஏன் உடைக்க வேண்டும். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் எங்களுக்கு கசப்பு கிடையாது. அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=medkglba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, நடிகர்கள் கைதானது அதிர்ச்சியான ஒன்று. சினிமா துறையினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இதை தொழிலாக செய்கிறார்கள், வருமானம் தேடுகிறார்கள், நாட்டை பாழாக்குகிறார்கள் என குற்றம் சுமத்த விரும்பவில்லை. நடிகர், நடிகககள் உள்பட புகழ்பெற்றவர்கள் போதைப்பொருளுக்கு ஆளாகி அடிமையாகி சீரழிகிறார்கள் என்பது கவலை அளிக்கிறதுமதுக்கடைகளை மூடுவதுடன், போதைப்பொருள் புழக்கத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மதுக்கடைகளை மூடன் வேண்டும் போதைப்பொருள் புழக்கத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும் கடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு என தனிப்படை அமைத்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

venugopal s
ஜூன் 27, 2025 11:11

எடப்பாடி ஏதோ திட்டத்தோடு தான் பாஜக கூட்டணிக்கு ஒத்துக் கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சாணக்கியர் அமித்ஷாவா அல்லது எடப்பாடியா என்று!


KUMARAN TRADERS
ஜூன் 27, 2025 10:56

பிளாஸ்டிக் சேர் தலைவரே திராவிடர் முன்னேற்றக் கழகத்திற்கு விசுவாசம் இல்லை என்றால் உனக்கு சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும் ஆதலால் அங்கே ஒட்டிக்கொள் ஏனென்றால் போதை பொருளை ஒழிப்பதற்கு அதை கண்டிப்பதற்கு வக்கில்லை அது மதிப்பீட்டு பேசுற எல்லாம் என்ன சமம்


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 09:04

திமுக மற்றும் விஜய் கட்சி தான் இவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.... விஜய் அவர்களை அரசியலில் காலி செய்ய.... வைகோ உடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கலாம்.


theruvasagan
ஜூன் 27, 2025 08:40

மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தையும் அரசு தடுக்க வேண்டும். இப்படி.மயிலிறகால் வருடிக் கொடுத்த மாதிரி சொன்னால் எப்படி. அதிரடியாக களத்துல இறங்கணும். மீண்டும் ஒரு மது ஒழிப்பு மாநாடு போடணும். வருகிற கூட்டம் சமீபத்தில் கூடின கூட்டத்துக்கு சவாலாக இருக்கணும். நம்ம பலத்தை காட்டவும் கூடுதல் சீட்டு கேட்கவும் தோதா இருக்கணும். மாநாடு நடத்துறதில் என்ன ஒரு கஷ்டம்னா மாநாடு நடக்குற சுற்றுவட்டாரத்தில் முதல்நாளில் இருந்தே சரக்கு சேல்ஸ கூரையபிச்சுகிட்டு போகும்.


சாமானியன்
ஜூன் 27, 2025 08:08

விசிக ஜெயிக்கவே முடியாத தொகுதிகளில் தங்கட்கு சீட் ஒதுக்க கூட்டணித் தலைமையை வேண்டுகிறேன். அப்போதாவது கத்துவது நிற்குதான்னு பார்க்கனும்.


Raj S
ஜூன் 27, 2025 00:48

கண்டவன்கிட்டயெல்லாம் மைக்க நீட்டாதீங்கடான்னு கேக்கறானுங்களா... இப்ப பாரு கண்ட கருமமெல்லாம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுது...


panneer selvam
ஜூன் 26, 2025 22:24

Thiruma ji , you are real well wisher of AIADMK and so worried about their alliance with BJP . It is better you could merge your e party with AIADMK and save them from alliance


Naga Subramanian
ஜூன் 26, 2025 21:51

திருமா தனியா நின்னா, 234ம் ஜெயிக்க முடியும். அவரை மாதிரியே, விஜயும் 234ம் ஜெயிச்சுடுவாரு. அப்புறமென்ன, ரெண்டு பேரும், அடுத்த 5 வருடத்துக்கு, தமிழக முதலமைச்சரா ஜாம் ஜாமுண்ணு பயணிக்கலாம். அப்புறமென்ன என்ஜாய்மென்ட் தான் போங்க.


திகழ்ஓவியன்
ஜூன் 26, 2025 22:18

5 % வெச்சிருக்கும் பிஜேபி பெரிசா வளர்ந்து விட்ட கட்சி தனியா நிற்க வேண்டியது தானே , அதுவும் 10 லட்சம் பேர் முருகன் பேர் வெச்சி கூடிய கூட்டம் வோட்டு போடுமா இல்லை வேட்டு வாய்க்குமோ


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 07:53

இதை.... தமிழ் நாட்டிலேயே பெரிய கட்சி என்று கூறும் திமுக தலைவரிடம் தான் கூற வேண்டும். தனித்து தேர்தலில் நின்றால்.... அதோ கதி தான்.... எத்தனை தொகுதியில் வைப்புத் தொகை பறி போகும் என்று சொல்ல முடியாது..... 14 கட்சி கூட்டணி இருந்தும் RK நகர் இடைதேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.....அதெல்லாம் நியாபகம் வரும் அல்லவா ???


Ramesh Sargam
ஜூன் 26, 2025 21:22

இவரெல்லாம் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் அளவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அந்த மத மாற்று கும்பலிடமிருந்தா?


SIVA
ஜூன் 26, 2025 21:15

ராமதாஸ் பாமக திமுக கூட்டணிக்கு செல்லும் , அன்புமணி பாமக அதிமுக கூட்டணிக்கு செல்லும் , விசிக டீவிக கூட்டணிக்கு செல்லும் ... பாமக ராமதாஸ் அவர்கள் அதிமுகவுடன் பேரத்தை ஏற்ற கூட திமுகவுடன் கூட்டணிக்கு செல்வது போன்று போக்கு காட்டலாம் ....


முக்கிய வீடியோ