உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு அ.தி.மு.க., வரவேற்பு தி.மு.க., நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் எடுபடாது என அறிக்கை

 திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு அ.தி.மு.க., வரவேற்பு தி.மு.க., நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் எடுபடாது என அறிக்கை

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை வரவேற்றுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, 'தி.மு.க., நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் என்பது ஒருபோதும் எடுபடாது. அதை அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் தொகுதிவாழ் மக்கள் எண்ணியபடி பொது அமைதியை நிலைநாட்டும் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றத்திற்கு நன்றி. மத ரீதியான நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசுக்கு ஒரு செயல்பாட்டு முறை இருக்கிறது. அதை முற்றிலும் மீறிய தி.மு.க., அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்காமல், காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு வன்முறை, அராஜகத்தை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் வரலாற்றில் தி.மு.க., அரசு இழைத்த கரும்புள்ளியாக அமைந்துவிட்ட நிலையில் அதை துடைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எளிய மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் போதும், துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை இரவோடு இரவாக ஒடுக்கிய போதும், 'நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுகிறோம்' என்று சொன்ன தி.மு.க., அரசுக்கு, அதே உயர்நீதிமன்ற உத்தரவோடு, கார்த்திகை தீபம் ஏற்ற இறை உணர்வோடு பக்தர்கள் வந்தபோது மட்டும் மதிக்கத் தோன்றவில்லையா. பதற்றமான சூழலை ஏற்படுத்தியது இந்த தி.மு.க., அரசு தானே. அரசு ஏற்படுத்தும் பதற்றம் தி.மு.க., அரசின் இரும்புக்கரத்தை குற்றவாளிகள் மீது ஏவச்சொன்னால், உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்த பக்தர்கள் மீது ஏவபட்டது வெட்கக்கேடானது. அமைதியின், ஆன்மிகத்தின், மத நல்லிணக்கத்தின் உறைவிடமான திருப்பரங்குன்றத்தில், திட்டமிட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்திய இந்த தி.மு.க., அரசு, உயர்நீதிமன்ற அமர்வால் குட்டு வைத்து குறிப்பிடப்பட்டுள்ள மத நல்லிணக்கம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் என்பது ஒருபோதும் திருப்பரங்குன்றத்தில், தமிழகத்தில் எடுபடாது. அதை அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ