உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.'தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mbcikpk7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என இ.பி.எஸ்., கூறி வரும் நிலையில், பேசும் பொருளானது.இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 12) அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''ஏங்க, நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேன். பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நன்றி வணக்கம்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பிரேம்ஜி
ஜூலை 13, 2025 07:33

வாய்ப்பேயில்லை! வெறும் பகல் கனவு! திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இன்னும் இருக்கிறது!


Mohamed Meerasa
ஜூலை 12, 2025 19:23

தமிழகத்தில் இன்றுவரை கூட்டணி ஆட்சி என்பது நம் தமிழ் மக்களின் சிந்தனையில் இல்லாத ஓன்று. தி.மு. க. அல்லது அண்ணா தி.மு.க வுக்கு பெரும்பான்மையுடன் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளார்கள். 1967வரை காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்தது என்பதுதான் வரலாறு. என்னை போன்றவர்களின் கோரிக்கை ஒன்றுதான் அண்ணா தி.மு.க விலிருந்து விலகி திக்கு தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும் புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அடலேறுகள் எதிர்காலம் கருதி ஒன்றுபட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை .அதனால் நம்மை வளர்த்து அடையாளம் தந்த இயக்கத்திற்கு எதிராக செயல்படுவது ஏற்க தக்கது அல்ல. புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் சொன்னது போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நம்மை யாராலும் அழிக்க முடியாது. சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம்.


vivek
ஜூலை 12, 2025 18:42

அப்போ ரூபாய் இருநூறு கருத்து போடவில்லை என்று சொல்கிறாரா ஓவிய விஜய்


vivek
ஜூலை 12, 2025 18:35

பாவம் ஓவியரு...... தோற்றபின் போலி பெயரில் கருத்து போடுவார் என்று நம்பலாம்


baala
ஜூலை 12, 2025 17:07

ஆனால் நீங்க முதல்வர் இல்லை அப்படித்தானே?


Oviya Vijay
ஜூலை 12, 2025 15:35

ஓ... கதம் கதம் என்பது மந்திரமா... எனக்குத் தெரியாதே... எனக்குத் தெரிவதெல்லாம் கண்முன்னே நிற்கும் மனிதர்கள் அவ்வளவே... அவர்கள் எம்மதத்தவர்கள் என்று என்றைக்குமே நான் பார்ப்பவனல்ல... அனைத்து மத நண்பர்களுடனும் இணக்கமாக இருப்பதனால் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் என்னால் பேசிப் பழக முடிகிறது... அந்த மகிழ்ச்சியை சங்கிகளால் உணரக்கூட முடியாது... என் அகம் மற்றும் புறக் கண்களில் என்றைக்கும் மதங்கள் தெரிவதில்லை...


guna
ஜூலை 12, 2025 18:39

என்னமா கம்பி கட்ற கதை சொல்றீங்க ஓவியரே


M Ramachandran
ஜூலை 12, 2025 15:12

தேர்தலுக்கு பின் எது பெரிய திமிங்க்லாம் என்று தெரியும்.


M Ramachandran
ஜூலை 12, 2025 15:10

கெடு புத்தி த்ரோகி களுக்கு விரோதிகள் எவ்வளவோ மேல்


Oviya Vijay
ஜூலை 12, 2025 15:00

இங்கே கமெண்ட் செக்ஷனில் நாம் சண்டையிட்டுக் கொள்வது வேஸ்ட்... அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை... ஏனெனில் இவர் கூறுவது போல பெரும்பான்மையுடனோ இல்லையெனில் அமித்ஷா கூறுவது போல கூட்டணி ஆட்சியோ அமைக்க வேண்டுமானால் முதலில் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்... ஜெயித்தால் மட்டுமே இவர்கள் கூறுவதெல்லாம் சாத்தியம்... ஆனால் அதுவே இங்கே நடக்கப்போவதில்லை என உறுதியாக தெரிந்துவிட்டபின் தேவையின்றி அடுத்தடுத்தகட்ட நகர்வுகளுக்கான பேச்சுக்களை நாம் விவாதிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லையே... இப்போதுள்ள கூட்டணிக் கணக்கின்படி தற்போதைய ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது... மற்ற அனைவரும் தோற்கப் போகின்றனர்... அவ்வளவே... கதம்... கதம்...


Nagendran,Erode
ஜூலை 12, 2025 15:12

கதம் கதமாம், இப்போது மட்டும் இந்துக்களின் மந்திரம் இந்த அப்பத்துக்கு மதம் மாறிய கூட்டத்திற்கு ஞாபகத்திற்கு வரும் அம்புட்டு ஆவல் உடனே நான் இந்து என்ற பழைய ஒப்பாரி பல்லவியை பாடாதே ஓவியா


கல்யாணராமன்
ஜூலை 12, 2025 14:47

அரசியல் சாணக்கியர் என்று தன்னை நினைத்து கொண்டிருக்கும் அமித்ஷா அவர்களே கேட்டீர்களா? எடப்பாடி சொல்வதை.


புதிய வீடியோ