உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 அக்டோபருக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு

2026 அக்டோபருக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை 2026 அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய குடும்ப நலத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீண் பவார் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில்:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், சுற்றுச் சுவர் கட்டுவது போன்றவை முடிக்கப்பட்டுள்ளன. திட்ட மேலாண்மைக்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டு மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய சிவில் பணிக்கு தொழில்நுட்பம், நிதி மதிப்பீடு குத்தகைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.2021 ல் ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே இந்த மருத்துவமனை கட்டுவதற்கு கடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜெய்க்கா நிறுவனம் 82 சதவீத கடனும், மீதித்தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை 2026 அக்டோபருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்