உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார்; தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு!

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார்; தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்புவனத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.போலீசார் விசாரணையில், இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=87f2h1sw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் மொபைல் போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் கூறினார். அப்போது முதல்வர், 'ரொம்ப சாரிம்மா; தைரியமா இருங்க. எனக்கு ரொம்ப வருத்தம் தான்' என்றார். இதை தொடர்ந்து, அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் பேசிய முதல்வர், 'நடக்கக்கூடாதது நடந்து விட்டது; தைரியமாக இருங்கள் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 02) அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தி.மு.க., சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளோம். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் விரைந்து விசாரித்து ஞானசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது போல இளைஞர் அஜித்குமாரின் வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Natarajan Ramanathan
ஜூலை 03, 2025 05:45

இந்த அரசில் யாருக்காவது அரசு வேலை வேண்டுமா? சும்மா போலீசிடம் ஒரண்டை இழுத்தால் போதும். விடியாமூஞ்சி முதல்வரே மன்னிப்பு கேட்டு அரசு வேலையும் கொடுத்து விடுவார்.


Natarajan Ramanathan
ஜூலை 03, 2025 05:42

ஐம்பது லட்சம் நஷ்டஈடு + அரசு வேலை + இலவச வீட்டு மனை பட்டா ... தமிழகத்தின் விடியல் அரசில் ஒரு சின்ன கொலைகூட ரொம்ப காஸ்ட்லீயாக இருக்கிறதே


மண்ணாந்தை
ஜூலை 02, 2025 23:53

யார் காசை யார் எடுத்து யாருக்குத் தருகிறார்கள். அரசு எதற்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும். முறையாக விசாரித்து குற்றவாளிகள் இடம் இருந்து பணம் அபராதமாக வசூலித்து பாதிக்கப் பட்டவருக்கு தருவது தான் முறை. ஆமாம் இங்கு... அரசே குற்றவாளி. அதனால் அரசே தருகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 20:00

அண்ணனுக்கு பால் ஊற்றி விட்டு தம்பிக்கு பால் பண்ணையில் வேலை. புது மாதிரி லஞ்சம்.


அஜய்
ஜூலை 02, 2025 17:43

தேர்தல் இன்னும் சில மாதத்தில் வர இருப்பதால் தான். இதை offer எல்லாம். இல்லையென்றால் திமுக இதை எளிதில் கண்டது சென்று இருக்கும். திராவிட மாடல் ஆட்சி என்ன என்று கேட்டால், இது தான் என்று ஸ்டாலின் இந்த விசயத்தையும் சொல்லி கொள்ள லாம்


ஈசன்
ஜூலை 02, 2025 17:32

இது போன்று நிகழ்வுகளில் காவல் துறை உயர் அதிகாரிகளையோ அல்லது மந்திரி, முதல்வரையோ குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. வேலை, நிலம் போன்ற இழப்பீடு தருவதை தவிர குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே ஒரு அரசின் கடமை. அது தான் இறந்தவர் குடும்பத்திற்கு செய்யும் பிராயச்சித்தம்.


V RAMASWAMY
ஜூலை 02, 2025 17:21

வேலையில்லாத் திண்டாட்டம் இனி தமிழகத்தில் இருக்காது. வேலை இருக்கிறதோ இல்லையோ, தேவையோ இல்லையோ, உயிரிழந்தவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் குடும்பத்திலிருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும். பணியில் சேர்ந்தவுடன் இருக்கவேயிருக்கிறது வேலை செய்யாமலேயே கிம்பளம் வேறு . அதான் இருக்கவே இருக்கிறார்கள் வாக்காளப்பெருமக்கள், பலவிதமான வரிகள் கொடுத்து அரசு கஜானாவை நிரப்பிவிடுவார்கள்.


VIDYASAGAR SHENOY
ஜூலை 02, 2025 16:58

பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டது திராவிட அரசு , வேலை வாங்க தெரியாத அரசு , முதல்வர், அதுவும் முதல்வர் துறையில் ..... ஓட்டை விற்கும் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்....


D.Ambujavalli
ஜூலை 02, 2025 16:34

அரசுப்பணி வாங்க இது நல்ல idea வாக இருக்கிறதே அந்தத் தம்பி எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல் யார் வேலை கொடுப்பார் என்று ஏங்கிக் கிடக்கிறாரா ?


Chandru
ஜூலை 02, 2025 16:32

Will the courts one again turn a blind eye to all these atrocities by the Government itself? Are the courts not interested in doing what is EXPECTED OF THEM. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை