உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமார் கொலை வழக்கு: மழுப்பும் நிகிதா; சி.பி.ஐ., கிடுக்கி

அஜித்குமார் கொலை வழக்கு: மழுப்பும் நிகிதா; சி.பி.ஐ., கிடுக்கி

திருப்புவனம்: கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில், கார் சாவியை அவர் வற்புறுத்தி வாங்கியதாக திருப்புவனம் போலீசில் பேராசிரியை நிகிதா புகார் கொடுத்திருந்த நிலையில், நிகிதா தான், கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்தது, சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிகிதா, தன்னிடம் இருந்த கார் சாவியை அஜித்குமார் வற்புறுத்தி வாங்கி, நீண்ட நேரம் கழித்து சாவியை ஒப்படைத்தார் என, திருப்புவனம் போலீசிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், சி.பி.ஐ., குழுவினர், 'சிசிடிவி' காட்சிகளை பரிசோதித்தபோது, கார் சாவியை அஜித்குமார் உடனே கொண்டு வந்து கொடுத்ததை கண்டறிந்துள்ளனர். காரில் சிறிது துாரம் சென்ற பின் தான், நகைகள் வைத்திருந்த கட்டைப்பையின் துணிகள் சிதறி கிடந்தததை கண்டு, நகையை நிகிதா தேடியுள்ளார். நகைகள் இல்லாததால், மீண்டும் நேரடியாக வந்து அஜித்குமாரிடம் கேட்ட போது, 'இல்லை' என அவர் மறுக்கவே, அறநிலையத்துறை அலுவலகத்திலும், அதன்பின் போலீஸ் ஸ்டேஷனிலும் நிகிதா புகார் அளித்துள்ளார். ஆனால், நிகிதா கைப்பட எழுதி கொடுத்த புகாரில், சாவியை நீண்ட நேரம் கழித்து கொடுத்தாகவும், காரில் ஏறும் போதே நகைகள் காணாமல் போனதை கண்டுபிடித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளது ஏன் என, சி.பி.ஐ., அதிகாரிகள் நிகிதாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, நிகிதா சரியாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், நகைகள் காணாமல் போனதாக நிகிதா கூறும் குற்றச்சாட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்தும் அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Shankar
ஆக 11, 2025 14:47

நிகிதாவின் நகைகள் காணாமல் போனது என்று சொல்வதே கட்டுக்கதை தான். அந்த பெண்மணியின் ஆணவம் தலைக்கேறியதால் நடந்த சம்பவம் அந்த கொலை.


subramanian
ஆக 11, 2025 12:32

தெருவில் ஒட வைத்து கல்லால் அடித்துக் கொலை செய்யவும்


Ramesh Sargam
ஆக 11, 2025 12:08

நிகிதாவை உடனே சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். நாட்கள் போகப்போக அவள் சாட்சியங்களை அழித்துவிடுவாள். பிறகு அவளை தண்டிப்பது மிக மிக கடினம்.


MP.K
ஆக 11, 2025 11:33

Now the case becomes susceptive and complex matter. Let us wait till the investigation completes. CBI have to investigate without any bias.


ஆரூர் ரங்
ஆக 11, 2025 10:24

முதல்வரே சிரிப்பு போலீஸ்துறையையும் கவனிக்கிறார். பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார். டேவிட்சன் உள்ளவரை காவலில்லாத் துறையாகதான் இருக்குமா?


pmsamy
ஆக 11, 2025 09:52

நகையை திருடி இருந்தா காரையும் சேர்த்து திருடி அப்படியே போயிருக்கணும் ஒரு வேலை அஜித் குமார் திருடனாய் இருந்தால். மறுபடியும் வந்து கார் சாவியை கொடுத்தான் என்றால் அவன் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும். அடிப்படை அறிவு இல்லாமல் தமிழக காவல்துறை ஒரு கொலை செய்திருக்கிறது. திமுக அரசுக்கு இது பெரிய சரிவு


veeramani
ஆக 11, 2025 09:38

பொய் குற்றம் சாட்டிய நிகிதா ..CBI சரியான காவலில் எடுத்து விசாரணை செய்தால் அபாயத்து உண்மைகளும் வெளிவரும்


கல்யாணராமன்
ஆக 11, 2025 09:04

நிகிதா அந்த ஐ ஏ எஸ் அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் எல்லாரையும் ஒரே பாணியில் விசாரிக்க வேண்டும். எதிரில் நாற்காலி போட்டு அந்தஸ்து பார்த்து உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டாம்.


பேசும் தமிழன்
ஆக 11, 2025 09:04

அடிக்க சொன்ன IAS அல்லது IPS அதிகாரி யார் என்று தெரிய வேண்டும். அவர் தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 11, 2025 07:51

நிகிதாவுக்கு கொடுக்கும் ட்ரீட்மென்டில் அந்த ஐபிஎஸ் அதிகாரி யாருன்னு கர்த்தர் ஆசீர்வதித்து காட்டிக்கொடுப்பார்


முக்கிய வீடியோ