உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரனுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அழகிரி!

பேரனுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அழகிரி!

சென்னை; முதல்வர் ஸ்டாலினை அவரது அண்ணன் அழகிரி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை அவரது அண்ணன் அழகிரி இன்று 28ம் தேதி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.அழகிரிக்கும், தி.மு.க., தலைமைக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்ததாக சொல்லப்பட்ட தருணத்தில் கட்சியில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டனர். பின்னர் சுமுக நிலை ஏற்பட்ட போதிலும் மீண்டும் கட்சிப்பணிகளில் அழகிரி ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஸ்டாலினை அழகிரி நேரில் சென்று வீட்டில் சந்தித்துள்ளார். பேரனுடன் சென்ற அழகிரி, ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும், தி.மு.க.,தொண்டர்கள் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.P.Anand
மார் 02, 2025 19:18

மனசு இனித்தது வாய் புளித் த து கட்டு மரம் மாதிரி கதை விடல


Ray
மார் 02, 2025 07:42

பேரனை பற்றி நல்லபடியா நாலு வார்த்தை சொல்லி உலகுக்கு கொஞ்சம் அறிமுகப் படுத்தியிருக்கலாம்.


sridhar
மார் 01, 2025 08:07

அரசியலில் ஜெயிக்க வெறும் ரௌடியிசம் மட்டும் போதாது , நிறைய cunningness வேணும்.


RAAJ68
பிப் 28, 2025 23:20

எம்மாடியோவ் இவ்வளவு பெரீய பேரனா? BORN WITH GOLDEN SPOON.


Amruta Putran
பிப் 28, 2025 21:33

Now it’s clear why Udhay


முக்கிய வீடியோ