உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=btdait85&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,03) பெஞ்சல் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு

சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழக மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

SUBRAMANIAN P
டிச 03, 2024 14:47

வாங்குற பணத்துல 2 மாசத்துக்கு தாங்குற மாதிரி சப்பையா ஒரு ரோடு போடவேண்டியது. திரும்பவும் கணக்கெழுதி அடுத்த ரெண்டு மாசத்துக்கு ஒரு ரோடு போடவேண்டியது. நல்ல கொள்ளை அடிக்கிறீங்கடா ரெண்டு திராவிடக்கட்சிகளும்.


Matt P
டிச 04, 2024 08:08

மாநில அரசுகளுக்கு என்று பல பணிகள் இருக்கும். மத்திய அரசுக்கு என்று சில பணிகள் இருக்கும். மாநில அரசுகள் செய்ய வேண்டியதை மாநில அரசுகள் செய்யும் மத்திய அரசு உதவியுடன். மாநில அரசு செய்ய வேண்டியதை மத்திய அரசு நேரடியாக செய்ய முடிந்து விட்டால் நாளைக்கே திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும். மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பார்கள்.


Indian
டிச 03, 2024 14:33

வாய்ப்பே இல்ல , ஒரு ரூபா கிடைக்காது ....இலவு காத்த கிளி தான் ..


Rajarajan
டிச 03, 2024 14:09

மத்திய அரசே, தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும், திட்டங்களும் தாருங்கள். நாங்களும் இந்தியர் தான், நாங்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான். ஆனால், அவற்றையெல்லாம் நீங்களே நேரிடையாக தாருங்கள். இடைத்தரகர் வேண்டாமே. இவ்வளவுதான்.


Rajan
டிச 03, 2024 14:09

முடிந்த உதவிகளை செய்வோம்னு சொல்லி இருக்கிறார்கள். 2000 கோடி தரேனு சொல்லி இருக்க மாட்டார்


SIVA
டிச 03, 2024 14:01

கருணாநிதியின் மஞ்சள் துண்டு மோடியின் கழுத்தில் , கூட்டணி கட்சிகள் வேறு கூட்டணிக்கு வேறு இடத்தில போட்டு வைக்கவும் ....


பாமரன்
டிச 03, 2024 13:58

ம்ம்ம்ம் ஒன்னும் நடக்க போறதில்லை... போங்க போங்க...


Barakat Ali
டிச 03, 2024 13:48

ஏற்கனவே சேலம் மாநாட்டில் பேசும்போது - நிவாரணம் குறித்து பேசுகையில் - பிரதமர் குறிப்பிட்டது "சோரி கர்னே நஹி தூங்கா" என்றார் .... அதாவது நிவாரணத்தில் கொள்ளையடிக்க விடமாட்டாராம் .... இப்போது அந்த கொள்கைக்கு மாறாக உறுதி கூறுகிறார் ....


Narasimhan
டிச 03, 2024 13:16

கருணாநிதியின் ராஜதந்திரம் மகனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. நாற்பது எம்பீக்களை வைத்துக்கொண்டு கொள்கையாவது கத்தரிக்காயாவது. அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லாத காந்தி குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதைவிட மத்தியில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து சில மந்திரி பதவிகளை பெற்று தமிழகத்துக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கலாம்.


Oviya Vijay
டிச 03, 2024 13:50

அப்படிப்பட்ட கேவலமான அடிமை வாழ்வு நமக்கு வேண்டாம் என்பதற்க்காகத் தான் தமிழ்நாட்டு மக்களே நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணாமல் தூக்கி எறிந்து விட்டனர்.. உங்கள் கூற்றுப் படி பார்த்தால் மத்தியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கா விட்டால் நமக்குரிய நிவாரணத்தை அவர்கள் தரமாட்டார்கள் என்று தானே அர்த்தம்... பாகுபாடு பார்க்கும் இந்த எண்ணமே கேவலம் இல்லையா...


Barakat Ali
டிச 03, 2024 14:14

அரசுக்கு ஆதரவு, அமைச்சரவையில் சேருதல் இவை எதுவும் இல்லாமலேயே, நல்லிணக்கத்துடன் சென்று காரியம் சாதிக்கலாம் ... ஆனால் பலரைத் திருப்திப்படுத்த ஒன்றியத்தின்மீது வசைமாரி பொழிய வேண்டியுள்ளது .....


Oviya Vijay
டிச 03, 2024 13:13

வழக்கம் போல தமிழ்நாட்டுக்கு வடை பார்சல்... ஃப்ரம் மோடி ஜி... வேற என்ன நடக்கப் போகுது??? நமக்கும் பார்த்து பார்த்து பழகிப் போச்சு...


ghee
டிச 03, 2024 13:39

அப்படியா குடுத்தா கொத்தடிமை கூட்டத்துக்கு போய்டும்... .மக்களுக்கு போகாது


sridhar
டிச 03, 2024 14:20

கோ back மோடி சொன்னவங்களுக்கு வடையே அதிகம் . அவஸ்தை படட்டும்.


KumaR
டிச 03, 2024 15:29

தமிழ்நாட்டுல இருந்து 40 பேர் பாராளுமன்ற கேன்டீன்ல ஓசில சாப்பிட தான போயிடு வராங்க..


theruvasagan
டிச 03, 2024 15:57

ஊசிப்போன வடையை கொடுத்தாலும் அதையும் ஆட்டைய போடற கும்பல் இங்க இருக்கு


Anonymous
டிச 03, 2024 18:33

அப்படிங்களா? அப்ப முழுசா முழுங்கி ஏப்பம் விட்டிருக்கீங்களே ,அந்த ₹4000 கோடிய இந்த தமிழக அரசுக்கு குடுத்தது யாருங்க? பக்கத்து நாடான பாகிஸ்தானா ? இல்ல சீனாவா?


ராமகிருஷ்ணன்
டிச 03, 2024 12:59

மோடி ஐயா திமுகவினரை துளியும் நம்ப வேண்டாம். முழு பலா பழம் தோல் இருக்க சுளை முழுங்கிகள். எந்த உதவியையும் கணக்கு சரிபார்த்து கொடுங்கள். 2 G ஊழல் களவாணிகள், மறக்க முடியுமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை