உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.,9 ல் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஏப்.,9 ல் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ''நீட் தேர்விற்கு விலக்கு பெறுவது தொடர்பாக ஏப்ரல் 9ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மருத்துவ துறைக்கே நமது நாட்டின் முன்னோடியாக தமிழகம் விளங்கி வருவதற்கு, நமது மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டு காலமாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவ கல்வி சேர்க்கை முறையே சாதனைக்கு அடிப்படை. தமிழக சட்டசபையின் தீர்மானங்களை மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகிவிட்டது. நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. 2006ம் ஆண்டில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்டப் படிப்புக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து,பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயில கூடிய, பள்ளி கல்வியின் மதிப்பெண் அடிப்படையில் சமூக நீதியும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பை உறுதி செய்வதற்கு சேர்க்கை முறையை கருணாநிதி உருவாக்கினார். நீட் தேர்வுக்கு எதிரான எங்கள் போராட்டம் எந்த வகையிலும் முடிவடையவில்லை. தமிழகம் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும். சட்ட வல்லுனர்களுடன், சட்ட நடவடிக்கைகள் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாலை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. நமது சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அ.தி.மு.க., வெளிநடப்பு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து, பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
ஏப் 04, 2025 16:08

Another drama starts . Stalin ji , are you going to invite your good old friends in Kerela , Karnataka and Telangana for this meet ? Remember all these guys already implemented NEET in their states . You will be a lone sparrow in NEET issue now


N Srinivasan
ஏப் 04, 2025 13:36

அப்பா உங்களுக்கு விலக்கு இல்லை என்று இப்போதான் தெரியுமா? என்னப்பா இப்படி பேசுறீங்க மொத்தத்தில் விலக்கு வாங்கித்தரேன்னு சொல்லி அப்பா பிள்ளை இரண்டு பேருமே 5 வருஷம் ஒட்டிடீங்க


N Sasikumar Yadhav
ஏப் 04, 2025 13:19

மறுபடியும் அப்பாவி மக்களை ஏமாற்ற கிளம்பிட்டாங்க இந்த மானங்கெட்ட திராவிட களவானிங்க . மக்களும் இலவசமும் ஓஷியும் வாங்கிக் கொண்டு இவன்களுக்கே ஓட்டுப்போட பழகிட்டாங்க


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 04, 2025 13:13

சூப்பர் சூப்பர். மீண்டும் முதலில் இருந்தா? நம்முடைய முதல்வருக்கு என்ன அறிவு என்ன அறிவு. நமது மிக புத்திசாலி ஆன முதல்வரை எவ்விதம் புகழலாம் என்று கூறுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை