மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
மதுரை: மாணவிக்கு பாலியல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும், மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை இடம் மாறுதல் செய்ய, கலெக்டர் சகாயம் நடவடிக்கை எடுத்தார். இப்பள்ளியில் மாணவி ஒருவரிடம் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, பாலியல் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர், போலீசில் சரணடைந்தார். கலெக்டர் சகாயம், அப்பள்ளியில் விசாரணை நடத்தினார். இப்பிரச்னையால் மற்ற மாணவியருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மருத்துவ கவுன்சிலிங் அளிக்க உத்தரவிட்டார். அத்துடன், பள்ளிச் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில், ஆசிரியர்கள் அனைவருக்கும் இடமாறுதல் அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். படிப்படியாக அங்குள்ள ஆசிரியர்கள் எட்டு பேருக்கு, உசிலம்பட்டி உட்பட பல்வேறு ஊர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கினர். ஆசிரியர்கள் கடந்த ஓரிரு நாட்களாக, பள்ளியில் இருந்து விடுவிப்பு பெற்று வேறு பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago