உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மா.செ.,க்கள் அனைவரையும் நீக்க வேண்டியிருக்கும்: திருமா

மா.செ.,க்கள் அனைவரையும் நீக்க வேண்டியிருக்கும்: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், தன் முகநுால் பக்கத்தில், நேரலையில் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், மூன்று மாவட்டச் செயலர்களை தவிர்த்து, ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். இது, கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். புகார் பரிசீலனையில் இருக்கிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 144 மாவட்டச் செயலர்களையும் நீக்க வேண்டியிருக்கும்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி, உயிர்ப்போடு இருக்கும். தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை வரிசைப்படுத்தி, அவற்றை தீர்க்க செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும்.எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், மனை பட்டா கோருவது பிரச்னையாக உள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்னைகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும்.சிறிய பிரச்னைகளை பெரிதுபடுத்தினால், நான் கட்சியையே நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
ஜூலை 12, 2025 16:02

குருமாவுக்கு மசலா அரைக்க ஆரம்பிச்சுட்டானுக. நல்ல காரியம். நடக்கட்டும். சீக்கிரமா ரெடி பண்ணி அடுப்ப மேலே ஏத்தி நன்றாக சுண்டும்படி கொதிக்கவச்சு அப்புறமா ஆறப்போடணும்.


Jack
ஜூலை 12, 2025 11:17

செக்கு மாடு .... மா செ ....இப்படி எதிர்பார்க்கிறாரா


Venkatesh
ஜூலை 12, 2025 07:40

பிச்சை எடு கொள்ளை அடி அடாவடி செய் அடித்து பிடுங்கு ரொளடித்தனம் பழகு மொள்ளமாரி வாழ்க்கை


R.MURALIKRISHNAN
ஜூலை 12, 2025 07:08

எல்லோரையும் நீக்குவதற்கு பதில் நீங்கள் கட்சியிலிருந்து நீங்கினால் போதும். மக்கள் பயனடைவர்.


எவர்கிங்
ஜூலை 12, 2025 06:59

தயவுசெய்து இந்த அடிமை விடியாமூஞ்சி படத்தை பதிவிடாதீர்கள்


Mani . V
ஜூலை 12, 2025 06:56

என்னைப் போல் கோபாலபுரம் குடும்பத்துக்கு ஊ...ற அதாவது ஊதுற வேலையை செய்ய மறுக்கும் ம. செ. கள் அனைவரையும் நீக்க வேண்டியிருக்கும்.


சூரியா
ஜூலை 12, 2025 06:36

இந்தக் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் எல்லாம் திருமாவின் கட்டிங் ஏஜன்ட். ஏதாவது நிலத்தை சுத்தம் செய்தாலோ அல்லது அங்கு ஏதாவது தொழில் தொடங்க வந்தாலோ, உடனே தங்கள் கட்சிக் கொடியை அங்கு கட்டி பேரத்தை ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒரு இடத்தில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் தங்களது வேலையை ஆரம்புக்கும்பொழுது, ஊர்மக்களிடம் சோலார் பேனல் மூலம் மின்சாரம் எடுத்தால் கேன்சர் வரும் என பயமுறுத்தி 50 லகரம் கட்டிங் வாங்கிய கும்பல் இது.


sridhar
ஜூலை 12, 2025 08:35

மக்களின் அறியாமை தான் திராவிட அரசியல்வாதிகளின் மூலதனம். இதே போல் பொய் சொல்லி மிஷனரிகளின் கைக்கூலியாக செயல் பட்டு sterlite ஆலையை மூடிவிட்டு மக்களை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார்கள் .


ramani
ஜூலை 12, 2025 06:16

அப்புறம் நீ தனியா தான் இருக்கணும். துணைக்கு ஆளுங்க இருக்க மாட்டாங்க


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 07:09

இந்த திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தினமும் குடைச்சல் கொடுப்பதை திமுவினர் எரிச்சலுடன் பார்க்கின்றனர். அதனால் இவனுடைய விசிகவை உடைத்து திருமாவை குருமாவாக்கும் சந்தர்பத்திற்காக காத்திருக்கிறார்கள். சில மூத்த திமுக அமைச்சர்கள் ஏற்கனவே அந்த வேலையில் முழு மூச்சாக இறங்கி விட்டனர் கூடிய விரைவில் நாம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் ஆனால் அது குருமாவிற்கு கெட்ட செய்தியாக இருக்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை