உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்போதும் நான் முன்கள வீரன்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

எப்போதும் நான் முன்கள வீரன்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 'தூய்மை பணியாளர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5qgibt0m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சென்னை யானைகவுனி பகுதியில் மழைக்கு மத்தியில், மீட்பு பணிகள் மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

தேநீர், பிஸ்கட் வழங்கினார் ஸ்டாலின்!

சென்னை பெரம்பூர் பகுதியில், மழை வெள்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் மீட்பு பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தேநீரை ஸ்டாலின் வழங்கினார். அவர்களுடன் அவர் பேசி கொண்டே தேநீர் அருந்தினார்.

முன்கள வீரன்!

இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள பதிவில், ' கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Guna Gkrv
அக் 17, 2024 07:53

இயர்கயை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது எத்தனை வடிகால் வசதி இருந்தாலும் இயர்கையின் சீற்றத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது, சும்மா அறிவுஇல்லை பயலுவ பேசுகிறார்கள், யாரையும் குறை சொல்ல முடியாது.


ஆரூர் ரங்
அக் 16, 2024 08:17

கோவைல தீயணைப்பு நேரத்தில் டீ பிஸ்கட் க்கு 26 லட்ச ரூபாய் செலவு கணக்கு. இப்போ சென்னை மாநகரில் வெள்ளம். டீ காப்பி, பிஸ்கட் டுடன் தயிர்வடை செலவையும் சேர்த்து பேக்கேஜ் போட்டு கணக்குக் காட்டலாம். 5000 Cr ஐத் தாண்டும்.


kantharvan
அக் 16, 2024 07:25

இதுக்கு பேரு வாழ்த்து அல்ல ஒப்பாரி ...இது இன்னும் பத்து வருஷத்திற்கு தொடரும் .


Really Good
அக் 16, 2024 06:10

திமுக வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வி அடையும் எனது வாழ்த்துக்கள்...


Matt P
அக் 15, 2024 23:10

தளபதின்னா வீரர் என்று தானே பொருள். வாய் சொல்லில் வீரரடி - பாரதி. இவர் வீரர்னா உதய நிதி இவர் பின்னால் பதுங்கி நிற்பாரா?


கிஜன்
அக் 15, 2024 20:51

உண்மைதான் .... முதல்வரே களத்தில் இறங்கியது ...பணியாளர்களுக்கு உற்சாகமா இருக்கும் ...


raja
அக் 16, 2024 10:08

ஏன் டீ யொட ஒரு குவார்டரும் ஓசியில் தற்றாங்களா...


kantharvan
அக் 19, 2024 07:04

உழைத்த முன்கள பணியாளர்களை அவமதிக்கிறார்.


sankaranarayanan
அக் 15, 2024 20:47

வருமுன் காப்பாற்றும் வீரன் - உங்கள் இல்லம் தேடி வெள்ள நிவாரணம் - மழையிலும் முதல்வர் - தண்ணீரை தடுத்து நிறுத்த போர்ப்படை வீரன் - வெள்ள நிவாரணத்துக்கு நாலாயிரம் கோடி - உங்கள் வெள்ளகள வீரன் - கட்டுமர வாரிசு - மக்கள் பனி மாவீரர் என்ற பெயர்களெல்லாம் உடனே வந்துவிடுமே


theruvasagan
அக் 15, 2024 19:15

கொரோனா சமயத்திலேயே இந்த முன்களப்ஸ் டிராமாவை பாத்தாச்சு. வருசாவருசம் அதே அரைச்ச மாவுதான். ஏகமா புளிச்சு போய் கெடக்கு.


sridhar
அக் 15, 2024 18:30

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நார்மல் மழைக்கே தெருக்களில் , வீடுகளில் தண்ணீர் நிற்கிறது . இதற்கு தான் நாலாயிரம் கோடி செலவு . இந்த லட்சணத்தில் மழை வந்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்களாம் . திமுகவுக்கு வோட்டு போட்ட மக்களை தான் சொல்லணும்.


VENKATASUBRAMANIAN
அக் 15, 2024 18:14

ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். ஆனால் மழை வந்த பின் போட்டோ ஷுட் எடுக்க வந்துவிடுவார்கள். இதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை