வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த விதியே தன்னை நொந்து கொள்ளும் இது போன்ற சம்பவங்களை பார்த்து..
திருப்பூர்: பல்லடம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=71n12wdi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸில் முருகனின் மனைவி கல்யாணி உள்பட 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நோயாளி முருகன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த விதியே தன்னை நொந்து கொள்ளும் இது போன்ற சம்பவங்களை பார்த்து..