உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஆம்புலன்ஸ் இடையூறு

மீண்டும் ஆம்புலன்ஸ் இடையூறு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு 7:00 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஏற்கனவே, பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால், அ.தி.மு.க.,வினர், அந்த வாகனத்தை வழி மறித்தனர். உள்ளே, நோயாளி யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தனர். வேண்டுமென்றே பழனிசாமி கூட்டத்துக்குள் ஆம்புலன்சை ஓட்டி வருவதாக கூறி, ஆம்புலன்ஸ் மீது கைகளால் குத்தி டிரைவருடன் தகராறு செய்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, டிரைவர் தெரிவித்தார். உடனே, போலீசார், அ.தி.மு.க., வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kjp
ஆக 25, 2025 23:15

எங்கே திகழ்பாய். இப்போ இதற்கு முட்டுக் கொடுக்க சரக்கு இல்லையா? இதற்கு பதில் சொல்லுங்கள்..


Nanchilguru
ஆக 25, 2025 21:22

அடுத்தது ஜேசிபி வரும்


Chess Player
ஆக 25, 2025 18:58

வெட்கமே இல்லையா தி மு க


என்றும் இந்தியன்
ஆக 25, 2025 17:50

இதெல்லாம் செய்வது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் கைக்கூலிகள், ஏனென்றால் அவர்கள் இந்த தடையை நேரில் செய்தால் திமுக திமுக தான் இதை செய்தது என்று பரவிவிடும் அதற்குப்பதிலாக இப்படி செய்தால் தவறை எதிரி அணியின் பேரில் திருப்பி விடலாம் என்று அவர்கள் தீவிர எண்ணம்


Sundar R
ஆக 25, 2025 14:31

மாற்றுக் கட்சியினர் நடத்தும் கூட்டத்திற்குள் வேண்டுமென்றே வண்டியின் உள்ளே டிரைவரைத்தவிர யாரும் இல்லாத நிலையில், ஏழு தடவை அல்லது எட்டு தடவை ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்லும் டிரைவருக்கு தமிழக அரசாங்கம், தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து "கோல்டு மெடல்" கொடுப்பார்களா?


S.L.Narasimman
ஆக 25, 2025 12:28

தீயசக்தி குடும்பமும் அல்லக்கைகளும் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை இதை போன்ற செயல்களில் உறுதிபடுத்துகிறார்கள்.


சமீபத்திய செய்தி