உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வந்தார் அமித்ஷா: கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

சென்னை வந்தார் அமித்ஷா: கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப். 10) இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தார். டில்லியில் இருந்து இன்று இரவு, 10:20 மணியளவில், தனி விமானத்தில் புறப்பட்ட நிலையில் சென்னை வந்த அமித்ஷா, வை வானதி ஸ்ரீநிவாசன், முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tgeticra&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மாலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளதாக தெரிகிறது. அங்கு ஆலோசனை நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஏப் 11, 2025 16:00

வந்த சுருக்கிலேயே திரும்பிப் போயிட்டாரே...


Nallavan
ஏப் 11, 2025 09:45

ப ஜ க வுக்கு தேர்தல் ஜுரம், இனி அடிக்கடி கம்பெனி அதிக நடமாட்டம் இருக்கும், ஆங்கில பேச தெரிந்து வரவும்


M R Radha
ஏப் 11, 2025 07:55

பாஜக வின் ரஸ்ஸ்யிசம் சித்தாந்தமே உயர்ந்தது/அழிவில்லாதது. ஆனால் தற்போதைய சூழலில் விதிகளை சற்று தளர்த்தி அண்ணாமலையே தலைவராகவே தொடரணும். 3-4% டூ 11-12% ஒன்றே போதும் அவருடைய உழைப்பின் மகிமையை எடுத்து காட்ட.


venugopal s
ஏப் 11, 2025 06:52

தமிழகம் வரும் போது நன்றாகவே இருக்கிறார்.


Seekayyes
ஏப் 11, 2025 06:22

அண்ணாமலை இல்லை என்றால், தமிழகத்தில் பஜக மீண்டும் காணாமல் போகும். இதை குருமூர்த்தி வலியுருத்த வேண்டும். பாஜகவை தமிழ்நாட்டில் பலமாக கால் ஊன்றவும், திராவிட கட்சிகளை வேரோடும், மண்ணோடவும் அழித்தொழிக்க வேள்வியாக அண்ணாமலை செய்து வருகிறார். அதை கைவிட வேண்டாம். இல்லை நாங்கள் அதிமுக முதுகில்தான் சவாரி செய்வோம் என்றால் பழனிசாமி ஜெயலலிதா அல்ல. தேர்தலில் தோற்றால் பஜக மீது பழியை தூக்கி போட்டு விட்டு பழனிசாமி ஒதுங்கி விடுவார்.


Kasimani Baskaran
ஏப் 11, 2025 03:49

திராவிட பாஜகவில் திராவிடத்தை நீக்க முயன்ற அண்ணாமலை படு தோல்வி என்பது அனைவருக்கும் ஓரளவுக்கு புரிகிறது. திராவிட கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர்கள் பாஜகவில் தொடர தகுதியற்றவர்கள். அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் வெளியேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் வெறும் காமடி மட்டும் மிஞ்சும்.


மீனவ நண்பன்
ஏப் 11, 2025 00:36

ராமதாஸ் அறிவாலயம் செல்வாரா ?


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 00:30

தமிழ்நாடு கவர்னர் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக அமீத் ஷா. சும்மா அதிருமுல்லே..


மதிவதனன்
ஏப் 10, 2025 23:49

ED IT சிபிஐ வெச்சி மிரட்டும் மாவீரர், இவருக்கு என்ன இவ்வளவு IMPORTANT என்று தெரியல என்னவோ UPHILL TASK பண்ணவர் போல ஒரு BUILT UP, நோட்டா கட்சிக்கு இவ்வவ்ளு ஸீன் ஏன்


viek
ஏப் 11, 2025 07:59

மதி இல்லா வதனா பொறுத்திருந்து பாரும்


Mettai* Tamil
ஏப் 11, 2025 09:29

ஊழல்வாதிக்கு வெகுமதி கொடுக்கும் உங்க எஜமானை கேளுங்க ....


முக்கிய வீடியோ