உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்: அமித் ஷா உறுதி

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்: அமித் ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், 'மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை, ராணிப்பேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அவர் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r8lrbrcb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: சி.ஐஎஸ்.எப்., பங்கு முக்கியமானது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சி.ஐ.எஸ்.எப்., தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இலக்குகளை அடைவதற்கு சி.ஐஎஸ்.எப்., பெரிதும் பங்களிக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

வரதராஜன்
மார் 07, 2025 22:01

சார் நீங்க ஆட்டி வைக்கிறதுக்கு ஆர்டர் இங்கே ஏகப்பட்ட பொம்மை தமிழ்நாட்டில் இருக்கிறது ஆட்டி வையுங்க .சுயமரியாதை முக்கியம் இதுநாள் வரைக்கும் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு .ஏன் தேவையில்லாமல் மும்மொழி மும்மொழி என்று முக்கி கொண்டு இருக்கிறீர்கள்.


வரதராஜன்
மார் 07, 2025 22:00

வணக்கம் நண்பர்களே ஒரு அன்பர் போட்டிருந்தார் சமீபத்தில் நடந்த ஒரிசா தேர்தல்ல ஒரு தமிழன் ஒரிசாவை ஆளலாமா என்று கேட்டவர்கள் மாநில மொழிக்கு முக்கியத்துவம் என்று கூறுகிறார்கள் நன்றி அப்ப தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை இருந்துட்டு போகட்டுமே நீங்க என்ன பணம் அது ஒதுக்கீடு போங்க எதுக்கு கையெழுத்து அக்கா காலை எழுத்த இயக்கங்கள் தேவையில்லாம வேலை நான் இருக்கேன் நான் இருக்கேன்னு காட்டுறதுக்கா உங்களுக்கு இது எல்லாம் ஒரு... பொழப்பா தெரியலையா


venugopal s
மார் 07, 2025 19:07

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம், ஆனால் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் திணிப்போம், அவ்வளவு தான்!


P. SRINIVASAN
மார் 07, 2025 16:35

அமிட்ஷா யாரு எங்கமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு? எங்கள் மொழிக்கப்பதற்கு எங்களுக்கு தெரியும். நீங்கள் குஜராத்தை பாருங்கள். சங்கிகள் வேலை தமிழ்நாட்டில் பலிக்காது


skrisnagmailcom
மார் 07, 2025 16:26

மொழியை வைத்து ஆட்சியை பிடித்து அரசியல் பிழைப்பு நடத்தும் திமுக அமித் ஷா என்னதான் காரடியாக கத்தினாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்


R prasath
மார் 07, 2025 15:24

முதலில் தமிழ் நாடு KV பள்ளிகளில் தமிழ் பாடம் எடுக்க சொல்லுங்கள் பிற மாநிலங்களில் தமிழ் கற்றுக்கொடுங்கள் பிறகு நாங்கள் ஹிந்தி கற்கிரோம்


Pandianpillai Pandi
மார் 07, 2025 14:33

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்றெல்லாம் பேசிய தாங்கள் தமிழர்களுக்கு உத்திரவாதம் தருவதா? இது ஏற்புடைய செயலா? நீங்க ஒன்னும் செய்யலன்னாலும் பரவால்ல. தமிழர்களை வஞ்சனையோடு பார்க்காதீர்கள். எங்கள் வரியை வாங்கிக்கொண்டு நீங்கள் நடந்துதுகொள்ளும் அதுவும் கல்வியில் வஞ்சனை செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. நீங்கள் பூனை என்று தெரிந்த பிறகும் உங்களை நம்புவதற்கு தமிழர்கள் ஏமாளிகளல்ல.


vivek
மார் 07, 2025 13:23

இங்கே என்ன வாழுது....


Oviya Vijay
மார் 07, 2025 12:33

தொப்பி போட்டவங்க எல்லாம் எம்ஜிஆர் ஆகிட முடியுமா? அவரு பாரத் ரத்னா வாங்குனவரு.. மக்கள் மனசுல இன்னமும் இருக்கிறவரு.. நீர் அடுத்த நாடாளுமன்ற எலெக்ஷனோட காணாம போகக் கூடியவரு... ஏணி வெச்சாலும் அவருக்கும் உமக்கும் ஒரு பொருத்தம் கூட செட் ஆவாது வே...


நம்பிராஜன்
மார் 07, 2025 15:45

தொப்பி போட்டவன் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. ஆனா வழுக்கையை மறைக்கத்தான் தொப்பி போட்டார்


Rajan A
மார் 07, 2025 16:36

எம்ஜிஆர் கட்சி இப்போது தீமுகவுடன் கலந்து விட்டது. மக்கள் முன்னேற்திற்கு தடையாக இன்னும் இருந்தால் திராவிட கட்சிகள் காணாமல் போய்விடும்


Oviya Vijay
மார் 07, 2025 12:08

நீ பேசுறத எல்லாம் தமிழ்நாடு மக்கள் பெருசா எடுத்துக்கவே மாட்டோம்... ஏன்னா இங்க வந்து தமிழ ஒசத்தி பேசுவ... அதே ஒரிசா போனா ஒரு தமிழன் நம்மை ஆள வேண்டுமா அப்படின்னு அந்த மாநில மக்களை தூண்டி விடுவ... சரியான பச்சோந்தியா நீர்... இப்படி ஒரு பிரட்டு அப்படி ஒரு பிரட்டு... அப்படிப்பட்ட ஆளு நீ... காரியக் கள்ளன் அப்படின்னு சொல்லுவாங்களே அதுக்கு நீர் தானே ஓய் உதாரணம்...


ஆரூர் ரங்
மார் 07, 2025 14:36

மலையாளி எம்ஜியார் வந்தேறி ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆளலாமா என எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்தது திமுகதான். . மத்தியப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வசுந்தராதேவியை ராஜஸ்தான் முதல்வராக ஆக்கியது பிஜெபி. ஹரியானாவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி முதல்வராக ஆக்கப்பட்டார். ஒரிசாவில் ஆட்சிக்கும் கட்சிக்கும் உழைத்த தலைவர்களை ஒதுக்கி விட்டு எங்கிருந்தோ அதிகார வர்க்க பாண்டியனை திணிக்க முயன்றது எதிர்ப்பிற்கு காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை