உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷாவுக்கு ஆதி யோகி சிலை பரிசளிப்பு!

அமித் ஷாவுக்கு ஆதி யோகி சிலை பரிசளிப்பு!

புதுடில்லி: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் சந்தித்தார். அவருக்கு ஆதி யோகி சிலையை பரிசளித்தார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, 'சத்குருவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மிகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில் அதன் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினோம்' எனக் கூறியுள்ளார். சத்குரு எக்ஸ் தளப் பதிவில், 'பாரதத்தின் உள்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரிக அம்சங்களில் அவரது ஈடுபாடும் ஆர்வமும் போற்றத்தக்கது,' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி