உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!

ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பார்லிமென்ட் கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வந்தே மாதரம் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பான விவாதங்களும் நடைபெற்று முடிந்தன. இதில், 'ஓட்டு திருட்டு குற்றச்சாட்டில் மத்திய அரசை ஒரு வழியாக்கி விட்டார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டென்ஷனாக்கி விட்டார்' என, காங்கிரசார் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இந்த விவகாரத்தில், காங்கிரசின் குற்றச் சாட்டுகளுக்கு அதிரடியாக பதில் அளித் தார், உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஆனால், அதைக் கேட்காமல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துவிட்டது. அமித் ஷாவிற்கு லேசான காய்ச்சல். இதனால், அவரின் உடல்நிலையைக் கண்காணிக்க, இரண்டு டாக்டர்கள் லோக்சபாவிற்கு வெளியே, 'லாபி'யில் காத்திருந்தனர். 'நீங்கள் அதிகம் பேச வேண்டாம்; ஓய்வெடுக்க வேண்டும்' என, டாக் டர்கள் ஆலோசனை அளித்தனர்; ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டார் அமித் ஷா. ராகுலுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக, ஆராய்ச்சி செய்து பலவித ஆவணங்களை எடுத்துக்காட்டி, ஆட்சி யில் இருந்த போது காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதை விலாவாரியாக விளக்கினார் அமித் ஷா.அவருடைய பேச்சு முடிந்ததும், லாபியில் உள்ள டாக் டர்கள் அமித் ஷாவின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். அதில், அவருடைய ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. 'ஓய்வு எடுங்கள்' என, மீண்டும் டாக்டர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், இரவு இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

N S
டிச 14, 2025 17:23

"என்ன பேச வேண்டும், எப்பொழுது, எப்படி என்று சொல்லிததரவேண்டாம்". இது போதுமே. துண்டை காணோம், துணியை காணோம் என்று கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் கூட்டிக்கொண்டு வெளிநடப்பு. கேன்டீனில் பாதி, தெருவில் மீதி.


Santhakumar Srinivasalu
டிச 14, 2025 14:10

அமித்ஷா பதில் பேச்சை கேட்காமல் ராகுல் வெளியே சென்றது மாபெரும் தவறு?


kumaran
டிச 14, 2025 14:06

ராகுல் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராக எதாவது சொல்ல வேண்டும் அவ்வளவுதான் உண்மையில் அவர் சொல்கின்ற கருத்தில் நம்பிக்கை இருந்தால் கருத்துக்கு எதிர் கருத்து என்ன என்று கேட்டிருப்பார் ஆக இது விளையாட்டு வேடிக்கை அதனால் தான் என்னவோ அவரை ராகுல் என்று அழைக்கிறார்களோ


V.Mohan
டிச 14, 2025 14:03

திரும்ப திரும்ப வோட் சோரி என்று புலம்பும் ராகுல் நாட்டின் எந்த முன்னேற்றத்திற்கும் உதவியதில்லை. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இயலாத இவருக்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள அடிமைத்தனத்தை கருத்துகளில் வெளிப்படுத்துவது தவிர்க்க இயலாது.


திகழ்ஓவியன்
டிச 14, 2025 11:46

, இதில் வெற்றி பெருமை வேறு


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 14, 2025 13:40

அதான் பயந்து ஓடி போய்ட்டோம் இல்ல


சம்சூ காதர் பேட்டை
டிச 14, 2025 10:47

vote சோரி


nagendhiran
டிச 14, 2025 12:47

அமைதினு சொல்லி குண்டு போடும் கூட்டம்? வோட் சோரினு"சொல்வது இயல்புதான்?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 14, 2025 13:41

கரெட்டா சொன்ன, காங்கிரஸ் இப்போ கேரளாவில் ஜெயித்தது வோட் சோரி மூலம் தான்


Against traitors
டிச 14, 2025 14:10

நல்லா கதறுமா. அடுத்து உன் தலைவன் பதவி 4 மாசத்தில் போகும்


Priyan Vadanad
டிச 14, 2025 10:26

ராகுல் பாத்தீங்களா? மெஸ்ஸிக்கு பக்கத்துக்கு பக்கத்துல நிற்கிறார் ... ராகுலின் உள்மனம் சின்னப்பிள்ளை உள்ளம்போல.


V Venkatachalam, Chennai-87
டிச 14, 2025 11:59

மெஸ்ஸி மெஸ் ஆயி நிக்குது. அப்போ மெஸ்ஸிக்கு பக்கத்தில் நரிக்குறவர் என்ன ஆவான் என்பது வெளிப்படை. இதுல மெஸ்ஸியை பத்தி பேச வந்துட்டானுங்க. தான் முதுகில் உள்ளதை மத்தவனை வச்சுத்தான் பாக்க வைக்கோணும். கொஞ்சம் கூட வெக்கம் இருக்காதா?


vivek
டிச 14, 2025 14:52

பிரியன் மனசும் வேகாத வடை போல...


Barakat Ali
டிச 14, 2025 18:24

சின்னப்பிள்ளை உள்ளம்போல ????


சமீபத்திய செய்தி