உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது

 அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது

பீஹாரில் வெற்றி பெற்றது போல், தமிழகத்திலும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழங்குகிறார். மேற்கு வங்கத்திலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என அமித் ஷா சொல்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிதாக கடந்து போக முடியாது. ஏனென்றால், பீஹார் சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல; கேரளாவிலும் திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ.,வினர் கைப்பற்றியுள்ளனர். கேரளாவில் இப்படி ஒரு பின்னடைவு இடதுசாரிகள் மற்றும் காங்., கட்சிக்கு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.,வினர் பீஹாரில் கையாண்ட ஓட்டுத்திருட்டு உத்தியை , தமிழகத்திலும் கையாள முயற்சிக்கின்றனர் என்பதை உணர முடிகிறது. அதை நடக்க விடாமல், விழிப்புடன் தடுக்க வேண்டும். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Madras Madra
டிச 15, 2025 16:06

பதறுது கதறுது


Muralidharan raghavan
டிச 15, 2025 11:12

உம்மை போன்ற ஆட்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருப்பதுதான் பாஜ வளர்ச்சிக்கு உதவும்


duruvasar
டிச 15, 2025 10:06

கடந்துபோக முடியவில்லையென்றால் ... தலீவா உட்டுடாதே பிசெபி உள்ளவந்துவிடும்.


duruvasar
டிச 15, 2025 09:59

ஒட்டு திருட்டுக்கு வழக்கு போடுங்க. நீங்களே வக்கீல் தானே. ?


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2025 07:38

இப்படிக் கதறுவதற்குப் பதிலாக பட்டியலின மக்களுக்கு ஏதாச்சும் உருப்படியாகச் செய்யலாமே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை