உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்

அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதால் பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை ஈஷா மையத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மாவட்ட பாஜ அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s0zwaguq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை வரவேற்க, மாநகர் முழுவதும் போஸ்டர், பேனர்களை பா.ஜ.வினர் வைத்துள்ளனர்.இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ., புதிய அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி குப்பையில் போட்டனர்.இதனை தொடர்ந்து பா.ஜ.,வினர், கோவை பீளமேடு போலீஸ் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கோவை- அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் முன்பு மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு வந்தபோலீசார் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

B MAADHAVAN
பிப் 25, 2025 23:06

நியாயம், நீதி, நேர்மை என்று வீரம் பேசும் ரோஷமுள்ள தீய முகவினர், அவர்களது தலைவர்கள் வரும் போது இதேபோல பதாகைகள் வைத்தால், கோவை மாநகராட்சி காரர்கள் பாரபட்சமின்றி நேர்மையாக அகற்றுவார்களா ....


venugopal s
பிப் 25, 2025 22:52

அடேங்கப்பா, பதினெட்டு பேர் இருக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தை காவல்துறை எப்படித்தான் சமாளித்தார்களோ?


Ramesh Sargam
பிப் 25, 2025 20:06

பதாகைகளைத்தான் இந்த திருட்டு திமுகவினரால் அகற்றமுடியும்.


chinnamanibalan
பிப் 25, 2025 19:50

கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திமுக வினர், பிற கட்சியினரின் வரவேற்பு பதாகைகளை கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு, அவர்களிடம் வன்மம் தலைவிரித்து ஆடுகிறது.


Narasimhan
பிப் 25, 2025 19:11

இந்திரா காந்தி மாதிரி ஆள்தான் இவர்களுக்கு தேவை. இப்போது தெரிகிறது ஏன் மிசா கொண்டு வந்தார்கள் என்று


sridhar
பிப் 25, 2025 18:57

ஸ்டாலின் வருகை பதாகைகளை பிஜேபி ஆட்கள் பிடுங்கி குப்பையில் வீச வேண்டும், எல்லோருக்கும் ஒரே நீதி.


Karthik
பிப் 25, 2025 21:15

எல்லோருக்கும் சம நீதி / ஒரே நீதி / சமூக நீதி. இதன் பொருள்.. எல்லோருக்கும் என்றால் நீங்கள் நினைப்பது போல் நீங்களோ நானோ பொதுமக்களோ கிடையாது, அது திமுக கம்பெனிக்காரர்களை மட்டும் குறிக்கும் சொல். உதாரணமாக.. எல்லோருக்கும் சம நீதி = திமுக வினர் எல்லோருக்கும் சம நீதி. எல்லோருக்கும் சமூக நீதி = திமுக வினர் எல்லோருக்கும் சமூக நீதி. எல்லோருக்கும் ஒரே நீதி = திமுக வினர் எல்லோருக்கும் ஒரே நீதி. தன் குடும்பத்திற்கு மட்டும் எல்லாமே நிதி


rasaa
பிப் 25, 2025 18:49

மிக, மிக கீழ்த்தரமான அரசியல். தி.மு.க. எந்த அளவிற்கு ஒரு மட்டுமாக கட்சி என தெளிவாக தெரிகின்றது. இவர்கள் வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.


Ganapathy
பிப் 25, 2025 18:42

கம்மி காங்கிரஸ் திருமாமா வளவன் போன்ற சொம்புகளை பார்த்து மிரட்டி பழகிய திராவிட களவாணிகளுக்கு ஸனாதன பாஜகவின் வளர்ச்சியும் தனித்துவமும் பிடிக்கவில்லை.


Nandakumar Naidu.
பிப் 25, 2025 17:50

திமுக அரசின் மிகவும் கேவலமான, கீழ்த்தரமான செயல். திமுக அழிக்கபடவெண்டிய தீய சக்திகள்.


rasaa
பிப் 25, 2025 18:50

முற்றிலும் உண்மை


முக்கிய வீடியோ