திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை::போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழர்களின் அரசு பணி கனவை சிதைத்து எதிர்காலத்தை சீர்குலைக்கின்ற வகையில் தலை விரித்தாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராகவும், தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.