தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கரூரில் காங்., - எம்.பி., ஜோதிமணி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷன் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றி உண்மை. ஆனால், 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே, பணி நடக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும், பா.ஜ., ஆளும் மாநிலமான அசாமில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை நடத்தாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வராத நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை அவசரமாக நடத்துகின்றனர். அ.தி.மு.க.,வும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக, காந்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.