உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி

திராவிடம் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி

சென்னை:விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை: தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்; கூட்டணி அரசு அமையும் என அமித் ஷா அடிக்கடி பேசுவதை, தேர்தல் வியூகமாக கருதி கடந்து விட முடியாது. பீஹார் போல, தமிழகத்திலும் வாக்காளர்களை நீக்கும் வாய்ப்பு உண்டாகும். அதன் வாயிலாக, காங்., கம்யூனிஸ்டுகள், திராவிடம் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயல்கின்றனர். தி.மு.க., வலுவான கூட்டணி என்றாலும், பா.ஜ., சங் பரிவார்களை நுழைய விடாமல் எதிர்க்க வேண்டும். ஜனநாயகம் - சனாதனம் இடையிலான யுத்தத்தில் ஜனநாயகம் வெல்ல வேண்டும். ஜனநாயக சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும். எத்தனை இடங்களில் வெற்றி என்பதை விட, சங் பரிவார்களை வீழ்த்தும் பொறுப்பு உள்ளதால், நிபந்தனையற்ற நட்பு வைத்துள்ளோம். துாய்மை பணியாளர் விவகாரத்தை பயன்படுத்தி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தவறான பிரசாரத்தை செய்கின்றனர். எங்களை பொறுத்தவரை, உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை