உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயற்கைக்கே பிடிக்காத இளைஞர் அணி மாநாடு

இயற்கைக்கே பிடிக்காத இளைஞர் அணி மாநாடு

ஆன்மிக மண்ணாக உள்ள தமிழகத்தில் எப்படி சனாதனத்தை அழிக்க முடியும்? 'சுண்டக்கா' அமைச்சர் உதயநிதியால் சனாதனத்தை அழிக்க முடியாது.இயற்கைக்கே பிடிக்காததால் தான், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு, மூன்று முறை தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் தனி நாடு; ஒன்றிய அரசு என்று கூறி வந்த முதல்வர் ஸ்டாலின், திருச்சியில் நடந்த விமான நிலைய விரிவாக்க விழாவில் பேசும்போது, பாரத பிரதமர், இந்திய பிரதமர் என பேசுகிறார். மீண்டும் பிரதமராக மோடி வருவது தெரிந்து தான், இப்படி பேசியுள்ளார்.போலீசாருக்கு வேலைப்பளு அதிகளவில் உள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், எட்டு மணி நேர வேலை, கூடுதல் போலீசார் நியமிக்கப்படும். போலீசாருடன் அனுசரித்து அரசியல் பணி மேற்கொள்ள வேண்டும் என, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 20:07

நடைபயணத்துக்கு புதிய உதாரணம் கற்பித்த நடைபயண நாயகனே... வாழ்க நீ... உன் யோசனை சாலச் சிறந்தது. போலீசாருடன் அனுசரித்து அரசியல் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை வரவேற்கத்தக்கது. காக்கியும், காவியும் ஒன்றானால்... தமிழ்நாட்டையே அதானி கூடாரம் ஆனாலும் ஆச்சரியம் இல்லை.


R.RAMACHANDRAN
ஜன 04, 2024 07:45

ஆன்மீகம் என்பது எல்லோரையும் தெய்வமாக காண்பதும் எல்லோர் உள்ளேயும் தெய்வமே உறைகிறது என்பதை உணர்வதுதான் ஆன்மீகம்.சனாதனம் என்பது உலகியல் அதற்கு லோகாயதம் என்றும் நாத்திகம் என்றும் பெயர்கள் உண்டு.வேற்றுமை உரைத்து வினைகளை பெருக்கிக்கொள்வது சனாதனம்.சனாதனத்தை பெரும்பான்மையானவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதற்காக வாக்கு வாங்கி அடிப்படையாகக்கொண்டு ஏமாற்றிக்கொண்டுள்ளார் இந்நாட்டில்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை