உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

சென்னை: 'சென்னை ஈ.சி.ஆரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் அண்ணாமலை அளித்த பேட்டி: மாநில அரசு சரியான தகவல் கொடுக்காமல் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு காரணமாக இருந்தும் கூட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரத்து செய்தது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் போட்டதால் நடந்ததாக கூறுகிறார். இதற்கு முன் சட்டசபையில் போட்ட தீர்மானம் எல்லாம் நடந்து இருக்கிறதா?

பாதுகாப்பில்லை

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பிரதமர் மோடி தான். நாளை அரிட்டாப்பட்டி சென்று விவசாயிகளை சந்திக்கிறோம். சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பெண்களை தி.மு.க., கொடி கட்டிய காரில் துரத்தி சென்ற வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது. போலீசாருக்கு எந்த வித உபகரணங்களும் கொடுக்காமல் தி.மு.க., அரசு இருக்கிறது.

அச்சுறுத்தல் கூடாது

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது. செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக நான் பார்க்கிறேன். செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள்.

பகல் கனவு

செய்தியாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்வது ஊடகங்களுக்கு எதிராக தி.மு.க.,வின் மனப்பான்மையை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார். அரிட்டாப்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு, மக்களுக்கு தலா. ரூ.300 கொடுத்து அழைத்து வந்துள்ளனர். தி.மு.க., ஆட்சி மீண்டும் வர வாய்ப்பு இல்லை. நாளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு நடக்கும் பாராட்டு விழாவை பாருங்கள். மக்கள் தானாக வந்து ஆதரவு அளிப்பார்கள்.

சாத்தியக்கூறு

நாடக கம்பெனி போல தான் தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எந்த காரணத்திலும் அவர்கள் ஆட்சிக்கு திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல தமிழக மக்களின் பொதுவான கருத்து. கவர்னர் இருந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்ன தி.மு.க., தற்போது ஏன் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் போடுவது டிராமா தான்.

கோழைத்தனம்

இரட்டை வேடம் போடும் தி.மு.க.,வை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் கல்வித்திறன் சரிந்துள்ளது என்பதில் என்ன தவறு இருக்கிறது. தி.மு.க.,வினர் செய்யும் செயல் கோழைத்தனம்.முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மாவட்டம் மாவட்டமாக எவ்வளவு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை கணக்கு எடுத்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டியது தானே?

100 சதவீதம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது உண்மை. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தரவுகள் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்துவிட்டேன். தேசிய தலைவர் என்றைக்கு மாநில தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு தமிழக பா.ஜ., தயாராக இருக்கிறது. இதற்கு காரணம் மாவட்ட தலைவர்கள் நியமனத்தை 100 சதவீதம் முடித்துவிட்டோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

vkpuram madhavan
ஜன 30, 2025 11:13

இன்றைய நிலையில் வீடியோ வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது, செட்டப்பாக கூட இருக்கலாம். காரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கும் அது செட்டப் என்றால் அந்த உண்மையையும், உண்மை என்றால் உடனடி கடும் நடவடிக்கையையும் எடுத்து பொது மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.


sankaranarayanan
ஜன 29, 2025 21:04

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது ஏன் பதறவேண்டும் அவர்கள் வரும்போது கட்சிக்கொடியுடன்தான் பாதுகாப்பாகதான் வந்துள்ளனர் அவர்களை சீண்டினால் சார் குறுக்கே வந்துவிடுவார் பிறந்து கதை கந்தலாகிவிடும்


sridhar
ஜன 29, 2025 20:48

யார் அந்த சார் , தொடர்ந்து எது அந்த கார்


srinivasan
ஜன 29, 2025 21:24

திராவிட மாடல்……ஏழாவது முறையும் அவங்கதானாம்…சுடலை சொல்கிறார்


Thiyagu
ஜன 29, 2025 18:55

கடுமையாக தண்டிக்கப்பட சரியான நீதிமன்றம் நாட்டில் இல்லை


raja
ஜன 29, 2025 17:42

திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் பெருமித படுகிறார்...


Barakat Ali
ஜன 29, 2025 17:17

யார் செய்தாலும் குற்றம் குற்றமே ..... கர்னாடக ரேவண்ணா உங்க கூட்டணி கட்சி ஆளுதான் அண்ணாமலை ஜி ...


venugopal s
ஜன 29, 2025 17:13

அதெல்லாம் சரிதான், கும்பமேளா வில் இன்று எத்தனை பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர் என்று உன்னுடைய கையாலாகாத மத்திய பாஜக அரசு மற்றும் உத்தரப் பிரதேச பாஜக அரசை சொல்லிச் சொல் பார்க்கலாம்! நேற்று இரவு இறந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்று மாலை வரை எண்ணி முடிக்க வக்கில்லை பாஜக அரசுக்கு!


sridhar
ஜன 29, 2025 20:49

Air ஷோ பார்க்கவந்த வெறும் பத்து லட்சம் பேரில் ஐந்து பேர் பலி , பலர் காயம். கும்பமேளா என்றால் கிலோ எவ்வளவு என்றாவது தெரியுமா .


Raj S
ஜன 30, 2025 01:44

நாம என்ன அவ்வளவு அறிவீலிகளவா இருக்கோம்?? நம்ம வீடு பெண் பிள்ளைகள் பாதுகாப்பா இல்லனு இப்பிடி பட்டவர்த்தனமா தெரியும்போது, எங்கயோ கூட்ட நெரிசல்ல இறந்தவங்கள பத்தி பேசறது ரொம்ப கேவலமா இருக்கு... கஞ்சா போதைலயும் டாஸ்மாக் போதைலயும் இருக்கற ஜந்துக்கள் மட்டும் தான் இப்படி பேச முடியும்... பெண் பிள்ளைகளை பெற்றிருந்தால் தெரியும்... உங்கள மாதிரி ஆளுங்க அம்மாவையே பெண்ணா பாக்காம ஒரு அடிமையா பாப்பீங்க போல


K.Ramakrishnan
ஜன 29, 2025 16:32

தப்பு செய்கிறவர்கள் அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.இதைப் பார்த்தால் செட் அப் டிராமா என்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் ஏன் இருக்கக்கூடாது?


sridhar
ஜன 29, 2025 20:46

அப்படியா, ஞானசேகரன் அடையாளத்தை மறைத்துக்கொண்டாரா. DMK goons are brazen.


Rajesh
ஜன 29, 2025 15:58

Law of the land will not be applicable to cars with Bumpers DMK party flag. Let the Tamilnadu Police make a surprise check.


T.sthivinayagam
ஜன 29, 2025 15:40

அதிமுக ஈபிஸ் ஐயாவுக்கும் பாஜாக அண்ணாமலை ஐயாவுக்கும் நல்லகாலம் திமுக ஸ்டாலின் ஐயாவுக்கு பொல்லாதகாலம்


veera
ஜன 29, 2025 16:15

ஆட்சி செய்வது ஸ்டாலின் அய்யதானுங்கோ..அவரு கிட்ட தான் போலீஸும் இருகுதுங்கோ...விவரம் தெரியாத கொத்தடிமை நீங்கோ.....என்று மக்கள் கூறுகின்றனர்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை