உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளா போல சட்டம் தேவை அரசுக்கு அன்புமணி கோரிக்கை

கேரளா போல சட்டம் தேவை அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: 'கேரளாவை பின்பற்றி, நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே, சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஜாதி, பிறப்பு, இறப்பு, வசிப்பிடம், வருவாய் சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவு சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு உட்பட, 50 சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது தான், சேவைபெறும் உரிமை சட்டத்தின் நோக்கம். இதற்காக, கேரள சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பித்த 30 நாட்களில், அந்த சேவையை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இதேபோன்ற வலிமையான சேவை பெறும் உரிமை சட்டத்தை செயல்படுத்த, கடந்த 15 ஆண்டுகளாக, பா.ம.க., போராடி வருகிறது. நம் நாட்டில், 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இச்சட்டம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற, தி.மு.க., அரசு இன்று வரை துரும்பை கூட அசைக்கவில்லை. சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற முகாம்கள் தேவையில்லை. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், தனது நண்பரான கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே, சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ