உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருஷ்டி தான் காரணம்: சொல்கிறார் அன்புமணி

திருஷ்டி தான் காரணம்: சொல்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுராந்தகம்: ''பா.ம.க., கூட்டத்திற்கு கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு, ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். இதனால், வந்த திருஷ்டியால் தான் அடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம், '' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.மதுராந்தகத்தில் நடக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: 45 நாட்களில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினோம். அமைதியாக வந்தனர். இது யாருக்கும் தாங்க முடியவில்லை. வயிற்றெரிச்சல். இதனால், வந்த திருஷ்டியால் தான் அடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தும். ஆனாலும் அந்த திருஷ்டி எல்லாம் போய்விட்டது.ஆட்சி அதிகாரம் வரும்முன்பே ஏராளமான சாதனைகள் செய்துள்ளோம். இதை எல்லாம் கவனித்து மக்கள் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பார்கள். 60 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால், பிரச்னை மாறவில்லை. இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வரப்போகுது. தேர்தலில் பா.ம.க., அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கும். கூட்டணி ஆட்சியில் நாம் அங்கமாக வகிப்போம்.

போதைப்பொருள் நடமாட்டம்

முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. மாறி மாறி நாம் என்ன கேட்டோம். சமூக நீதி, வேலைவாய்ப்பு, கல்வி கேட்டோம். அதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், தீர்வு கிடைக்கும். பின்தங்கிய மக்களுக்கு படிப்பு கேட்டோம். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அதை அழித்துவிட்டு, சாராயத்தை கொடுத்தனர். பொட்டலம், போதை, கஞ்சா, அபின், கொக்கைன், ஹெராயின் என அமெரிக்காவில் உள்ள போதைப்பொருட்கள் அனைத்தையும் பள்ளி, கல்லூரி வாசல்களில் விற்கின்றனர். ஆளுங்கட்சிக்கு தெரியாமல் எப்படி விற்க முடியும்? போலீசாருக்கு தெரியாமல் எப்படி இருக்க முடியும்? அனைவருக்கும் தெரியும். விற்பது தெரியும்.ஆனால், ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் உள்ளார். இப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை.

ஏமாற்றுகின்றனர்

நமது குழந்தைகள் படித்தும் வேலையில்லை. மக்கள் விரோத அரசு, உங்களின் நிலத்தை பிடுங்கி தொழிலதிபர்களிடம் இலவசமாக கொடுத்து விடுகின்றனர். அவர்கள் தொழிற்சாலையை கட்டிவிட்டு, பீஹார், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கின்றனர்.நமது குழந்தைகள் எதுவும் இல்லாமல் உள்ளனர். இது தான் தி.மு.க., சமூக நீதிக்கு எதிரான கட்சி தி.மு.க., ஆனால், வசனம் மட்டும் பேசுவார்கள். வசனம் பேசி பேசி ஏமாற்றுகின்றனர். அவர்களுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை.கொள்ளையடிப்பது மட்டும் தெரியும். கொள்ளையோ கொள்ளை அடித்து கொண்டு உள்ளனர். மக்களை ஏமாற்றுகின்றனர்.

நடைபயணம்

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும் போதுமா? டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது. அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது தெரியவந்தது. தீவிரமாக சோதனை செய்தால், 40 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கும். இதை தான் உங்களிடம் கொடுத்து தேர்தலை சந்திப்பார்கள். ராமதாஸ் பிறந்த நாளான வரும் 25ம் தேதி தமிழக மக்களின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 10 கோரிக்கைகளை வைத்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். நாம் இணைந்து செயல்பட வேண்டும். வேற்றுமைகள் இருக்கக்கூடாது. நமக்குள் எந்த பதிவும் போட வேண்டாம். திமுக.,வை எதிர்த்து பதிவுகளை போட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆட்சி முடிவதற்கான கவுன்ட் டவுன் துவங்கி உள்ளது. இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:29

நவீன மருத்துவன் அன்புமணிக்கு திருஷ்டி கழிக்க ராமதாஸ் வருவாரா?


TMM
ஜூன் 16, 2025 11:01

இத்த விதமான பேச்சு பகுத்தறிவின் எந்தப்பக்கத்தில் உள்ளது?


nisar ahmad
ஜூன் 15, 2025 22:56

ஆமாமா பமக நிறைய நல்லது செய்திருக்கிறது மக்களே அடுத்த தேர்தலில் பமகவுக்கு 234 தொகுதியிலும் ஓட்டு போட்டு அன்பு மனியை முதல்வராகவும் ராமதாஸை கவுரவ முதல்வராகவும் தேர்ந்தெடுக்கவும்.பிறகு குடிசைகள் எறியும் ஆனவக்கொலைகள் நடக்கும் மரங்கள் வெட்டி நடு ரோட்டில் வீசப்படும்.


Santhakumar Srinivasalu
ஜூன் 15, 2025 21:46

நன்கு வளர்ந்த மரங்களை நெடுஞ்சாலையில் வெட்டி போட்டு ஜனங்களை இம்சை செய்தது தான் சாதனை!


V Venkatachalam
ஜூன் 15, 2025 21:28

அடடா, அன்பு மணி அவர்களே நீங்க என்ன சாராய வியாபாரி சுடாலின் லெவலுக்கு இறங்கிட்டீங்களே... அவர் தான் வயித்தெரிச்சல் பொறாமை இத பத்தியெல்லாம் நல்லா பேசுவாரு. இப்ப நீங்க அவருகிட்ட ஏதாவது உள் குத்தகை வாங்கிட்டீங்களா என்ன? இப்ப யார் யாருக்கு போட்டின்னு ஒரே குழப்பமா இருக்கே.