உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள்

சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள்

99வது பிறந்த நாள்

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 8:00 மணிக்கு வேதங்கள் ஓதப்படுகின்றன. 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனம் நடக்கிறது. ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். பகவானின் வாழ்க்கை வரலாறு வீடியோ, திவ்யாஞ்சன் சேவை, ஸ்ரீசத்ய சாய் பிரேமதரு திட்டத்தின் கீழ், 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதன் நிறைவு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, மங்களாரத்தி நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு வேதம், தங்க ரத ஊர்வலம்; 5:30 மணிக்கு ஊஞ்சல் மஹோற்சவம் நடக்கின்றன.லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமியின் வயலின், அர்வின்குமாரின் மிருதங்கம், ஆகாஷ் திரிவேதியின் தபேலா, சர்வேஷ் கார்த்திக்கின் தவில், நாராயணன் சர்மாவின் கீபோர்டு பக்தி இசை; மல்லாடி சூரி பாபு மற்றும் மல்லாடி சகோதரர்கள், பிரசாத்தின் மிருதங்கம், எம்பார் கண்ணனின் வயலின், கணபதியின் தபேலா ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பஜனையை தொடர்ந்து, மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை