வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரொம்பவே கருப்பு சாயம் தலைக்கும் மீசைக்கும் ..
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின் தேவை கடுமையாக அதிகரிக்கும். அதை சமாளிக்க, தனியாரிடம் இருந்து, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதி பெறாமல், ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரி உள்ளது.இது மிகவும் கவலை அளிப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது அத்துடன், இனியும் அது தொடரக்கூடாது என கண்டித்துள்ளது. தமிழகத்தின் மின் தேவை, உற்பத்தியை விட அதிகமாக இருந்தால், அதை வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், அதற்கு முன் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் பெற வேண்டும். ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் கோரினால், அது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும். தங்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள, அது பெரும் தடையாக இருக்கும் என, அரசும், மின் வாரியமும் கருதுகின்றன.அதனால்தான், தங்களின் விருப்பப்படி ஒப்பந்தப்புள்ளிகளை கோரிய பிறகு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்ய கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் புள்ளிகளை, மின் வாரியம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரொம்பவே கருப்பு சாயம் தலைக்கும் மீசைக்கும் ..