மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
மதுரை: மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஊழலுக்கு எதிராகவும், அன்னா ஹசாரேயை ஆதரித்தும், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கொட்டும் மழையிலும் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம் நடந்தது. காந்திமியூசியத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு நம்நாடு மக்கள் மீட்பு பேரவை தலைவர் தமிழரசன் தலைமை வைத்தார். வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெகதீஸ், செயலாளர் ஜேம்ஸ் லூயி பால்சன், லீட் இந்தியா டிரஸ்ட் தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தனர். பப்ளிக் விஜிலன்ஸ் டிரஸ்ட் தலைவர் சின்னசாமி, பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட் தலைவர் தீபக் பார்மர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் ராமமூர்த்தி, மருந்து தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் தலைவர் கார்த்திக் பிரபு பங்கேற்றனர். ஊழலுக்கு எதிரான வக்கீல்கள் சங்கம், மதர் தெரசா பவுன்டேசன், சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு, ஜீவநதி அறக்கட்டளை, ஆனந்தா அறக்கட்டளை, விக்ரம் நர்சிங் கல்லூரி, தென்னிந்திய நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தேனூர் கிளை உட்பட பல அமைப்பினர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டம்: மதுரை ஸ்காட் ரோட்டில் நேற்று மாலை அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இந்தியா இயக்கத்தின் மதுரை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.பிரார்த்தனை: மதுரையில் நேற்று பெட்கிராட் அமைப்பு சார்பில் அன்னா ஹசாரேயை ஆதரித்து மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஊர்வலம் பாண்டியம்மாள் தலைமையில் நடந்தது.
10 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago